குமரகுருபரர் நீதிநெறி : 63
“பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா – முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா”
சிறு தீயாக எரியும் நெருப்பு அருகில் இருக்கும் பொருட்கள் மேல் எல்லாம் பரவிகொண்டே இருக்கும், அப்படி பேராசை மிக்கவர்கள் தங்களுக்கு இருக்கும் பொருளோடு திருப்தி அடையாமல் அடுத்தவர் பொருட்களை விழுங்குவதிலே குறியாக இருபார்கள்
நெருப்புக்கு எவ்வளவு கொடுத்தாலும் தீராது, அது தன்னில் விழுவதையெல்லாம் எரித்து இன்னும் கேட்டு கொண்டேதான் இருக்கும், பேராசை மிக்கவரின் ஆசைக்கும் அப்படி முடிவே இல்லை என்பது பாடலின் பொருள்
பேராசை என்பது நெருப்பு போன்றது, அந்த ஆசைக்கு முடிவே இல்லை அவர்கள் ஒரு காலமும் நிம்மதி அடையபோவதில்லை என்பது பாடலின் பொருள்