புதிய சிவ‌ப்பு புரட்சி..

இந்த வர்க்கபுரட்சி, செங்கொடி புரட்சி, அரிவாள் சுத்தியல் புரட்சி எல்லாம் இனி எடுபடாது என தெரிந்து “காதல் புரட்சிக்கு” வந்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள்

இனி பாருங்கள் மார்க்ஸ் ஜென்னியின் காதல் கதை மட்டும் சொல்லி புரட்சி செய்வார்கள்.

சிகப்பு நிறம் என்பதே காதலர் உடலில் ஓடும் ஒரே ரத்தம் என அர்த்தம் கொள்ளபடும், காதலுக்கு குறுக்கே யார் வந்தாலும் அரிவாளும் சுத்தியலும் கொண்டு காதலை காக்க வேண்டும் என புதிய கீதம் பாடபடும்

மார்க்ஸ் மாவோ இங்கர்சால் என எல்லோரும் இனி விரட்டபட்டு லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி , ரோமியோ ஜூலியட் , சலீம் அனார்கலி என காவிய காதலர் பரணி பாடபடும்

லெனின் படத்து பதில் இனி தாஜ்மகால் படம் இடம் பெறும்

ஆக இனி கோஷம் இதுதான்

“உலக காதலர்களே ஒன்று சேர்வீர், காதல் புரட்சி உலகம் படைப்பீர்”

கம்யூனிஸ்டுகள் இத்தோடு நிறுத்திகொண்டால் நல்லது, இதன் அடுத்தகட்டத்துக்கு சென்று புரட்சி செய்தால் நாடு தாங்காது

ஒருவேளை அந்த சிகப்பை நோக்கித்தான் கொடிபிடிக்கின்றார்களோ என்னவோ…