ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 08
“பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து”
பூரித்தல் என்றால் பெரும் மகிழ்ச்சி என பொருள், இங்கு பெரும் மகிழ்ச்சி என்பது யோகத்தின் உச்சியில் அடையும் பரவசநிலை என்றாகின்றது
அந்த அதிஉச்ச யோக நிலையில் சிவனோடு ஐக்கியமானால், சிவனோடு இரண்டற ஆத்மா கலந்தால் ஒருவனின் மனம் விசாலமாகும் மிகபெரிய மனதுடன் இன்பம் துன்பம் நன்மை தீமை கடந்த பெரும் யோகி நிலைக்கு அவன் செல்வான் என்பது குறளின் பொருள்
யோக பரவச நிலையில் சிவனோடு ஐக்கியமான யோகியின் மனம் இந்த பிரபஞ்சம் போல பெரும் விஸ்தாரமாகிவிடும் அவன் எண்ணமும் சிந்தனையும் எல்லை கடந்து நிற்கும் என்பது ஒளவை சொல்லும் போதனை