ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 04

“பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை”

இக்குறள் “பழுத்து இனிரதம் போல் பரந்தெங்கும் நிற்கும் அழுதினால் ஈசநிலை”

பழுத்த பழத்தை பிழிந்தால் இனிய சாறு கிடைப்பது போல கனிந்த மனதை பக்தி யோகத்தால் பிழிந்தால் ஞானசாறு ஊறும் அங்கு ஈசன் நிலையினை உணரலாம் என்பது குறளின் பொருள்

கனிந்த மனம் என்பது பக்தி நிரம்பிய மனம், இறைபக்தியில் கனிந்த பக்குவபட்ட நிலையில் இருக்கும் மனதில் ஈசன் நிலைகொள்வார் என்பது ஒளவையார் கொடுக்கும் போதனை