குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 72

“பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற்
கைவிதிர்த் தஞ்சப் படும்”

எந்த காரணமும் பகையும் இல்லாமல் அடுத்தவரின் பழிகளை குற்றங்களை தவறுகளை மட்டும் சொல்லி நகைத்து திரிபவனால் எந்த பயனுமில்லை, அவன் அடுத்தவரின் வலியினை கண்டு மகிழ அவர்களை அடிக்கும் தன்மையினை கொண்டவன், அப்படிபட்டவனை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி வைத்தல் வேண்டும் இல்லையேல் அவனால் கலகம் ஏற்படும் என்பது பாடலின் பொருள்

அடுத்தவரையே நகைத்து திரிபவனால் கலகம் உண்டாகும், அவனை ஆதரித்தால் பெரும் குழப்பம் உண்டாகும், அப்படிபட்டவனை அடக்கி வைத்தலே நல்லது என்பது பாடலின் பொருள்

இந்த பாடலை அடியொற்றி ஜெகவீர பாண்டியன் எனும் கவிஞனும் (அவன் மன்னனும் கூட) தன் தருமதீபிகை எனும் நூலில் ஒரு பாடலை எழுதியுள்ளார் இப்படியாக‌

“பல்லார் இடையே பரிகாசம் செய்து,வாய்
வல்லார் எனவே மனங்களிக்கும்; – பொல்லாரை
நாக்குத்தேள் என்றெண்ணி நண்ணாதே எவ்வழியும்
நீக்கி விடுக நெடிது”

அதாவது பலர் நடுவே பரிகாச வார்த்தைகளைப் பேசி அதனால் தம்மைச் சமர்த்தாகக் கருதிக் களிக்கும் இழிமக்களை நாக்குத் தேள்களாக நினைத்து உடனே வெளிதள்ளி நீக்கி விடுக என்கிறார்