குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74
குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74
“தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல – தீயன
நல்லன வாகாவா நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல”
தீய செயல்களை செய்வாரின் செல்வம் பெரிதாக பெருகினும் தீமை தீமையே, அதனால் பெற்ற செல்வமும் தீயதே ஆகும், தீயது ஒரு காலமும் நல்லது ஆகாது
கவயம் எனும் காட்டுபசு பார்ப்பதற்கு பசுபோல இருந்தாலும் அது நாவால் நக்கினாலே உயிர்கள் இறந்துவிடும், அப்படிபட்ட விஷம் போன்றது தீயவழியில் சேர்க்கபடும் பொருள் என்பது பாடலின் பொருள்
இங்கு கவயம் எனும் விலங்கை குறிப்பிடுகின்றார் குமரகுருபரர், அப்படி ஒரு விலங்கு இருந்ததாக பல குறிப்புகளும் தென்படுகின்றன, பார்ப்பதற்கு காட்டுபசு போலவே இருக்கும் அவ்விலங்கு விஷம் கொண்டது, அதன் நாவுபட்டாலே உயிர்கள் இறக்குமாம்
அப்படிபட்ட கவயத்தின் நாவு போன்றது தீயவழியில் சேர்க்கபடும் செல்வம், பசுவடிவில் நிற்கும் கவயம் போல தீயவழியில் சேர்க்கபடும் நல்ல செல்வமாக தெரிந்தலும் அச்செல்வம் அழிவைத்தான் தரும் ஒரு காலமும் வாழ்வை தராது என்கின்றார் குமர குருபரர்