ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 01

“மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்

அனைத்தினு மில்லை யது”

இக்குறள் மனத்தோடு உறுபுத்தி ஆங்காரம் சித்தம் அனைத்திலும் இருப்பதில்லை என பிரிந்து பொருள் தரும்அதாவது சிவமாகிய பரம்பொருளை அடையும் முக்தி என்பது மனம், புத்தி, ஆங்காரம் சிந்தனை என எல்லாவற்றையும் கடந்த பெருநிலை என்பது குறளின் பொருளாகும்

இந்த ஆத்மா நான்கு விஷயங்களிலும் சிக்கி ஸ்தம்பித்து கொண்டால் முக்திநிலை கிட்டாது, இதையெல்லாம் கடந்த ஞானநிலைதான் முக்தி என்பது ஓளவை சொல்லும் போதனைசித்தர்கள் கண்ட சமாதிநிலை எனும் முக்தி நிலையினைத்தான், அந்த முக்தி இந்த நான்கு விஷயங்களையும் கடந்தது என்பதைத்தான் சொல்கின்றார் ஒளவையார்