குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 79

“திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும்
பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் – நறுவிய
வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர்”

மனைவியானவள் திருமகள் எனும் மகாலஷ்மி போல மனதாலும் குணத்தாலும் அழகாலும் வீற்றிருந்தாலும், அவளை விட அழகானவளாய் இருந்தாலும் சிலர் அடுத்தவன் மனைவிக்கு ஆசைபட்டு தங்கள் பெருமையினை இழந்து சிறுமைபட்டு நிற்பர்

இப்படிபட்டவர்கள் தங்கள் வாயில் இருக்கும் நல்ல உணவை வீசிவிட்டு விஷத்தை உண்ணும் விலங்கை போன்றவர்கள் என்பது குறளின் பொருள்

(இதற்காக அப்படியானால் மனைவி அழகாகவோ குணமாகவோ பெறாதவன் அடுத்தவன் மனைவியினை நாடலாம் என குமரகுருபரர் சொல்கின்றார் என பொருள் அல்ல )

தனக்கொரு மனைவி இருக்க பிறன்மனை நோக்குதல் விலங்குக்கு சமமான குணம் என்பது பாடலின் பொருள்