குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 80
“கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு – மக்கட்பே
றென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு”
அதாவது ஒரு குடும்பபெண் கற்பை ஆடாயாக உடுத்திக்கொள்ள வேண்டும், அன்பைப் பூவாக முடித்துக்கொள்ள வேண்டும். நாணம் என்னும் வெட்கத்தை உடம்பில் பூசிக்கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் நல்ல குணம், நல்ல செயல் என்னும் அணிகலன்களை அணிந்துகொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு குழந்தைப்பேறு என்பது செல்வமும் இருந்துவிட்டால் இல்லற வாழ்க்கை மிகவும் நல்லது, அப்படிபட்ட மனைவி அமைவது தவபயன் போன்றது
மனைவியானவள் கற்பு எனும் உண்மையுடனும், கணவ்ன் மேல் அன்புடனும் குலபெண்களுக்குரிய நாணத்துடனும் இருத்தல் வேண்டும் அதுதான் கணவனுக்கு முதல் செல்வம், அந்த நல்ல மனைவியோடு குழந்தை செல்வமும் வாய்த்துவிட்டால் அதைவிட செய்வம் வேறில்லை இப்படிபட்ட செல்வமெல்லாம் தவபயனால் விளைவது போல் மிக பொக்கிஷமானது என பொருள்