893ம் ஆண்டு இதே நாளில்
1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் முழங்கிய முழக்கம் அதுவரை பழமையான காட்டுமிராண்டி மதம், மூடபழகக்ம் கொண்ட மதம் என ஐரோப்பியர் நம்பிகொண்டு அந்த இழிவான நம்பிக்கையால் இந்துமதத்தை ஏளனபடுத்திகொண்டிருந்ததையும் தகர்த்து போட்டதுஅந்த ஞான உரைக்கு பின்பே உலகம் இந்துமதத்தை பெருமையாக கண்டது, ஏகபட்ட பேர் இந்துமதம் பணிந்தனர், எவ்வளவோ சமயவாதிகள் மவுனமாக இந்துமத பெருமையினை ஒப்புகொண்டனர்அந்த கூட்டத்தில் ஒரு விஞ்ஞானி இருந்தான், அவன் அன்றைய உலகில் மட்டுமல்ல என்றுமே விஞ்ஞான உலகில் மறக்கமுடியா மாமனிதன்அவன் பெயர் நிக்கோலஸ் டெஸ்லா, செர்பியாவில் பிறந்து தன் விஞ்ஞான தேடலுக்காக அமெரிக்கா சென்று பெரும் விஞ்ஞான சாதனைகளை கொடுத்த சித்தன்உண்மையில் அவன் ஜெகதீஷ் சந்திரபோஸை மனமார ரசித்தவன், அப்பொழுதே இந்துக்களின் அறிவிலும் நம்பிக்கையிலும் அவனுக்கொரு கிறக்கம் இருந்தது, இந்த பிரபஞ்சம் சக்தியால் நிரம்பியது அதைத்தான் மானுடன் பயன்படுத்துகின்றானே தவிர இங்கு ஆச்சரியம் ஏதுமில்லை என்பது அவன் நம்பிக்கையாய் இருந்ததுடெஸ்லா உலகை புரட்டி போட்ட விஞ்ஞானி, அவனே இன்றைய உலகின் மாற்று மின்சாரம், மோட்டார், வயர்லெஸ், எக்ரே, லேசர் என எல்லாமும் கண்டறிந்தவன்மார்கோனிக்கு முன்பே ரேடியோவினை கண்டறிந்தவன்தாமஸ் ஆல்வா எடிசனிடம் அவன் சேர்ந்தபின்பே பெரும் கண்டுபிடிப்புகளை பெற்றார் எடிசன், ஒருவகையில் டெஸ்லா அவருக்கு அச்சுறுத்தலானான்எடிசன் எந்த அளவு விஞ்ஞானியோ அந்த அளவு பணமும் சம்பாதிப்பார், அவரின் “ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ்” இன்றும் அப்படி குவிக்கின்றது, அப்படிபட்ட எடிசன் வியாபார நோக்கில் டெஸ்லாவினை கட்டுபடுத்தினார்காரணம் டெஸ்லா சித்தன் சாயல், அவனுக்கு மக்களின் நல்வாழ்வுக்காக விஞ்ஞான கருவியினை உருவாக்க தெரியுமே தவிர சம்பாதிக்க தெரியது, தன் கண்டுபிடிப்பில் 700 கருவிகளுக்கு அவன் காப்புரிமைகூட கோரவில்லை இன்று வந்திருக்கும் கண்டுபிடிப்பெல்லாம் அவனுடையது ஆனால் யார் பெயரிலோ வந்திருக்கும்மாற்று மின்சாரம் எனும் மின்சாரத்தை கண்டறிந்ததில் டெஸ்லாவினை விரட்டினார் எடிசன் ஆனாலும் இன்னொரு நிறுவணம் அவனை அணைத்தது, அதில்தான் நயகாரா அருவியில் இருந்து பெரும் மின்சாரம் எடுக்கும் திட்டத்தை சாதித்தான் டெஸ்லாஇன்றுவரை இருக்கும் விஞ்ஞானிகளில் அவனே தலைசிறந்த விஞ்ஞானி அதாவது மக்களுக்கான பெரும் கண்டுபிடிப்புகளை கொடுத்தவன் அவனேஇன்று கார் முதல் லேசர் வரை உலகம் இயங்குவது அவனாலே. அவன் சித்தனாய் வாழ்ந்தான் பணமும் குடும்பமும் தேடவில்லை, எவ்வளவோ பணமும் பெண்களும் குவிந்தபொழுதும் அவன் விஞ்ஞான சிந்தனையிலே இருந்தான்அந்த டெஸ்லா விவேகானந்தரின் உரை நிகழ்ந்த மண்டபத்துக்கு வந்தான், தாமதமாக வந்தவன் சிறிதுநேரம் நின்றுவிட்டு சென்றுவிடத்தான் முடிவெடுத்தான்ஆனால் சுவாமி பேசபேச அவன் ஆனந்தமாய் உணர்ந்தான், ஒரு கட்டத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததுஆம் சுவாமி இப்படி முழங்கிகொண்டிருந்தார்”அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: ‘பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.’ இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளதுபரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் விஞ்ஞானம்.முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அது மேலே செல்லாமல் நின்று விடும். எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டு பிடித்தவுடன் மத, விஞ்ஞானம் பூரணமாகி விடும்” அவர் பேச பேச பெரும் அவதாரம் முன் நிற்கின்றோம் எனும் சிந்தனை டெஸ்லாவுக்கு வந்தது, சுவாமியினை பின் சந்தித்து பேசினார், அதுவும் அவர் மட்டும் பேசவில்லை அப்போதைய அமெரிக்க நாடக உலகில் புத்தரின் ஆன்மீக நாடகங்களை நடத்தி பெரும் புகழ்பெற்ற நடிகை சாரா பென்ஹார்டும் சுவாமியினை சந்தித்தனர்புத்தரின் ஆன்மீகம் பற்றியும் இந்துமத்தின் சாரத்தை அவர் பிரித்து போதித்ததையும் அதன் மூல ஞானம் கீதை என்பதையும் சொல்லி பெரும் திருப்பத்தை கொடுத்தார் சுவாமி, அதன் பின் அந்த நடிகை புத்தர் மேலான அபிமானங்களை குறைத்து கீதையிலும் இந்துமதத்திலும் கவனம் திருப்பினார்சுவாமிக்கும் டெஸ்லாவுக்கும் நடந்த பல இடங்களின் உரையாடலும் அவர் விஞ்ஞானத்தில் ஆன்மீகம் தேடியதையும், சுவாமி இந்து ஆன்மீகமே விஞ்ஞானம் என போதித்ததையும் பல இடங்களில் கட்டுரையாக பலர் சொல்லியிருகின்றார்கள்இங்கு நாம் அதனை முடிந்தவரை புரிந்து கொள்ள பார்க்கலாம் “சுவாமி உங்கள் உரையில் இருந்து நான் மிகபெரிய தேடலின் வாசலில் நிற்கின்றேன், எனக்கு எப்பொழுதுமே இந்திய புராணங்களில் ஒரு ஈர்ப்பு உண்டு , அவை அக்கால விஞ்ஞான வடிவங்கள் என்றே கருதுகின்றேன், ஆனால் எனக்கு அதையெல்லாம் விளக்க யாருமில்லை, உங்கள் மூலம் ஒரு ஒளி தெரிகின்றதுசொல்லுங்கள் டெஸ்லாஉங்கள் வேதங்கள் வெறும் மூடநம்பிக்கையோ கட்டுகதையோ அல்ல, நான் பேட்டன்ட் வாங்கியிருக்கும் ஏசி கரண்டின் தத்துவமே வேதங்களின் சாரம்தான்எப்படி?ஒரே திசையில் செல்லும் மின்சாரத்தை விட நேர்முனை எதிர்முனை என மாறிமாறி பாசிட்டிவ் நெகட்டிவ் என மாறி மாறி செல்லும் மின்சாரம் சக்திமிக்கது. இந்துக்களின் புராணத்தில் தேவர் அசுரர் என பாசிட்டிவ் நெகட்டிவ் சக்திகளை பெரும் தெய்வங்கள் சரியாக பயன்படுத்தும் அல்லவா அதுதான் அடிப்படை, நேர்முனையும் எதிர்முனையும் மாறிமாறி தூண்டபடும்பொழுது சக்தி கூடும்இதைவிட நான் சொல்ல என்ன இருக்கின்றது டெஸ்லாசுவாமி எனக்கொரு சந்தேகம் உண்டு, சக்திகள் சக்திமூலம் அது பரவும் முறை பற்றி சொல்லமுடியுமா?டெஸ்லா இந்த உலகில் எல்லா சக்தியும் நிரம்பியிருக்கின்றது, அந்த சக்தி என்பது பிராணா (உயிர் அலைகளின் முக்கிய ஆற்றல்), ஆகாஷா (ஈதர்) மற்றும் கல்பம் (ஆயுட்காலம்) என மூன்று வழிகளில் செயலாற்றுகின்றதுஅப்படியானால் ஆத்மா ஆன்மீகம் என்பதும் விஞ்ஞானம் என்பதும் வேறா?இல்லை, இந்த சக்தி என்பது ஒன்றுதான் ஆனால் மானிட உடலில் ஆத்மா தங்கியிருக்கும் காலம் அது மூச்சு காற்றாக சக்தியினை உடலுக்கு கொடுக்கின்றது, அந்த ஆத்மாவுக்கும் சில கடமைகள் உண்டு, அந்த கடமையின் பொருட்டு அச்சக்தி உடலில் செயலாற்றி மானிட அறிவுக்கு ஒரு வாழ்வு என காட்டி காலம் முடிந்ததும் ஆத்மாவினை அழைத்து கொள்கின்றதுஅப்படியானால் விஞ்ஞானம்டெஸ்லா நாம் மானிடர்கள் நம் வாழ்வு நம் உலகம் நம் நலம் என மட்டும் குறுகிய வட்டத்தில் இருப்பதால் இந்த உலகமே நமக்காக நம்மை சுற்றி இயங்குவதாக கருதுகின்றோம், உண்மையில் அந்த பெரும்சக்தியின் ஒரு துளிதான் மானிட இயக்கம், மானிட வாழ்வுக்காக அது சில வடிவங்களை ஆற்றலாக கொடுக்கின்றது மற்றபடி அச்சக்தி பெரிதுஇன்னும் விளக்கமுடியுமா?பிராணா (உயிர் அலைகளின் முக்கிய ஆற்றல்), ஆகாஷா (ஈதர்) மற்றும் கல்பம் (ஆயுட்காலம்) என மூன்றையும் சொன்னால் உங்களுக்கு புரியும்அழியாத பெரும் சக்தி என்றும் நிலையான சக்தி பரம்பொருள் அல்லது பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே எல்லா சக்திகளும் தோன்றுகின்றன இவை பிராணன், இந்த ஆற்றல் நிரம்பியிருக்குமிட்ம் பிரபஞ்சம், அந்த ஆற்றலுக்கான ஆயுள் கல்பம்அப்படியானால் ஆற்றல் அழியுமா?அழியாது ஆனால் மாறும் எல்லாம் ஒரு பரம்பொருளிடம் இருந்து வருகின்றன, பல சகதிகளாய் வெளிபடுகின்றன, பின் பரம்பொருளிடமே முடிகின்றன. ஆன்மீகவாதிகள் அந்த ஆன்மா எனும் உயிர்வடிவை மட்டும் பார்க்கின்றார்கள், ஆனால் விஞ்ஞானிகளாகிய நீங்கள் நிறைய சக்திகளை காண்பீர்கள் அல்லவா?ஆம், இந்த காந்தபுலம், மின்னல் சக்தி, எங்கும் மூடியிருக்கும் ஒரு ஊடக சக்தி என நாங்கள் பிரமிக்கின்றோம், கம்பியில்லா தகவல் தொடர்பு என்பது வானொலி ஆனால் அந்த அலையினை கூட ஒரு வெளியில் கடத்தமுடிகின்றது என்றால் அங்கும் ஒரு சக்தி கண்ணுக்கு தெரியா கடலாக இருக்கின்றது சுவாமிஆக விஞ்ஞானம் என்பது ஏற்கனவே இருக்கும் சக்திகளை நெறிபடுத்தும் ஆய்வுதான் இல்லையா?நிச்சயமாக சுவாமி, நாங்கள் எதையும் இங்கு புதிதாக சக்தி என உருவாக்கமுடியாது, இங்கு இருக்கும் சக்திகளை மானிடர்கள் பயன்படுத்தும்படி மாற்றுவதுதான் எங்கள் ஆய்வுமானிடர்கள் சுகமாக வாழ வழிசெய்வது உங்கள் ஆய்வு, மானிடர் உண்மை உணர்ந்து நிம்மதியாக சுக துக்கம் தாண்டி வாழசெய்வது எங்கள் ஆய்வுசுவாமி இப்படி பெரும் தத்துவங்கள் இந்துமதத்தில் இருக்கும்பொழுது ஏன் பல தெய்வ வழிபாடும் ஏகபட்ட சிக்கலும் அங்கே இருக்கின்றது?டெஸ்லா மூல மின்சாரம் சக்திமிக்கது அல்லவா?ஆம் நிச்சயமாகதயாரிக்கபடும் மொத்த மின்சாரத்தையும் ஒரு மனிதனுக்கு கொடுத்தால் என்னாகும்?அய்யோ எரிந்துவிடுவான்அதனால் என்ன செய்கின்றீர்கள்?அந்த மின்சாரத்தை பல வடிவங்களாக பிரித்து ஒன்றுக்கொன்று சக்தி குறைந்ததாக்கி எளிய வகையில் மக்களுக்கு கொடுக்கின்றோம்அதேதான் பிரபஞ்சமும், அந்த மூலபரம்பொருளின் சக்தியும் ஒளியும் வலிமையும் தாங்குமளவு இங்கு எதுவும் பலமானதல்ல, அந்த சக்தியின் வல்லமையினை மானிடன் உணரும் பொருட்டு அது தன்னை பல வடிவங்களாக்கி காட்டிற்று இதனைத்தான் இந்துமதம் ஏகபட்ட கடவுளாக சொல்கின்றது, இன்றைய அணு ஆய்வு அதுதான்ஒப்புகொள்கின்றேன் சுவாமி, எல்லாம் இங்கு ஒரே சக்தி அந்த சக்தியினை ஆத்மா எனும் உயிர்சக்தி மூலம் உணர்பவன் ஆன்மீகவாதி, அந்த சக்தியினை பல வடிவங்களாக மாற்றுபவன் விஞ்ஞானி எல்லாம் மூலம் ஒன்றேஆனால் மனிதனின் பண ஆசையும் ஆட்சி ஆசையும் அதனை பெரும் சக்திபோல் காட்டுகின்றன அல்லவா?ஆம் சுவாமி, அதைத்தான் நான் எதிர்க்கின்றேன், இது இப்படியே பெருகினால் பெரும் அழிவுகளும் சிக்கலும் வரகூடும், எதிர்காலம் கற்பனைக்கு அப்பாற்பட்டு மாறகூடும்(இது முதலாம் உலகபோருக்கு முன் நடந்த சந்திப்பு)அதனை கண்டு அஞ்சுகின்றீர்களா?அச்சபட என்ன இருக்கின்றது சுவாமி, காந்தபுலம் நின்றுவிட்டால் விஞ்ஞானமே இல்லை, இந்த கருவிகளெல்லாம் நொடியில் செயலிழக்கும், ஒரு சக்திதான் எல்லாவற்றுக்கு மூலம் அந்த சக்தி தன்னை நிறுத்திகொண்டால் மானிட ஆட்டம் செல்லாதுநன்றாக் சொன்னீர்கள் டெஸ்லா வேறு ஏதும் தெரிய வேண்டுமா?சுவாமி ஒரு ஆற்றலை நாங்கள் இன்னொரு ஆற்றலாக மாற்றுகின்றோம், ஓடும் நீரில் இருந்து மின்சார ஆற்றல், அல்லது எரியும் நெருப்பில் இருந்து மின்சாரம் எந்திர ஆற்றல் என இயங்கும் ஆற்றலில் இருந்துதான் இன்னொரு இயங்கு சக்தியினை பெறுகின்றோம், சூரியனில் இருந்து தொடர்ந்து வரும் வெப்பம் , பூமி சுழல்வதால் தொடர்ந்து வரும் காந்தபுலம் என்றுதான் சக்தி பெறுகின்றோம்ஆம் இதைத்தானே சிவனின் நடனம் என எங்கள் ஆன்மீகம் கூறுகின்றதுநிச்சயமாக இந்த பிரபஞ்சமே இயங்கித்தான் சக்திபெறுகின்றது, இயக்கத்தில் இருந்துதான் இயக்கம் கிடைக்கின்றது சுவாமிஆம், அதைதான் பராசக்தி என எங்கள் தர்மம் சொல்கின்றது, சிவநடனம் என்பதும் அதுதான் இந்த இயக்கம்தான்அப்படியானால் இயங்கா பொருள் அதாவது நிலையான பொருளில் இருந்து சக்தி ஆற்றல் வராதா சுவாமி, நான் இப்பொழுது அதனில்தான் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றேன்நீங்கள் எங்கள் ஆன்மீகத்தை ஆழபடித்தால் விடைகிடைக்கும்எப்படி சுவாமிஎங்கள் தர்மத்தில் அசையா வடிவமாக சிவன் இருப்பார், அவரை பார்வதிதேவி இயக்கும் பொழுதுதான் உலகம் இயங்கும்புரியவில்லை சுவாமிஅணு பற்றி உங்கள் கருத்து என்ன?அணு என்பது பிரிக்கமுடியாதது, அதற்குமேல் பிரியாதது என்றுதான் நியூட்டனும் டால்டனும் சொல்லியிருக்கின்றார்கள், நானும் அதை நம்புகின்றேன்கொஞ்சம் நான் சொல்வதை ஆழமாக கவனிக்கின்றீர்களா?சொல்லுங்கள்பரமாத்மாவில் இருந்து ஏகபட்ட ஜீவாத்மாக்கள் உருவாகின்றார்கள் அல்லவா? அதாவது ஒரு ஆத்மா பல ஆத்மாவாக பிரிகின்றது அல்லவா?ஆம்அப்படியானால் ஏன் ஒரு அணு இன்னும் பலவாக பிரிய கூடாதுஅது சாத்தியமா சுவாமி?சிவனுடன் சக்தி கூட் இந்த பிரபஞ்சமும் உயிர்களும் உண்டாவதாக எங்கள் வேதம் சொல்கின்றது, அதன் விஞ்ஞானவடிவம் என்னவாக இருக்கமுடியும்? திடபொருளை ஒரு சக்தி தொடும்பொழுது அது சக்தியாய் எழுகின்றது வெடித்து பரவுகின்றது என்பது என சொல்கின்றதுஅப்படியனால் திடபொருளில் இருந்தும் ஒரு சக்தி எழுவது சாத்தியமா சுவாமிஆம், ஒரு வினையில் அது தொடர்ந்து இயங்குவது சாத்தியம்இதனை எப்படி சொல்கின்றீர்கள் சுவாமிஅதேதான் டெஸ்லா, பிராணா (உயிர் அலைகளின் முக்கிய ஆற்றல்), ஆகாஷா (ஈதர்) மற்றும் கல்பம் (ஆயுட்காலம்) இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டுஅதுபற்றி விஞ்ஞானம் சொல்லவில்லை மூன்றும் தனி தனி என்கின்றதுஅல்ல, இந்த மூன்றும் அதாவது ஆற்றல், காலம், அந்த மூலபொருள் எனன மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பரம்பொருளின் தத்துவம் அது, எம் வேதங்கள் அதை தெளிவாக சொல்கின்றனஇந்த பொதுவிதியினை கண்டறிந்தால் திடபொருளில் இருந்து ஆற்றல் நிலைக்கு மாற்றமுடியுமா சுவாமிஅசையா பொருளில் இருந்துதான் எல்லாம் தோன்றிற்று என்கின்றது எம் வேதம், அதனால் எல்லாமே சாத்தியம்நான் முயற்சிக்கின்றேன் சுவாமிஅதை நீங்கள் முயற்சித்துவெற்றிபெற்றால் இந்துமதம் விஞ்ஞான வடிவில் நிருபிக்கபட்டதாக அர்த்தம்”இத்துடன் இந்த சந்திப்பு முடிந்தது, அதன் பின்னும் பல இடங்களிலும் டெஸ்லா விவேகானந்தர் சந்திப்பு நடந்ததுபாமரர் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் புரிந்துகொள்ள முடியா விளக்கங்களை இந்து ஆன்மீகத்தில் இருந்து எடுத்து கொடுத்தார் விவேகானந்தர்டெஸ்லா மட்டும் அதை புரிந்து கொண்டான்இருவரும் பல இடங்களில் இருவரை பற்றியும் சொன்னார்கள்1896 பிப்ரவரி 13ல் விவேகானந்தர் எழுதுகின்றார் “டெஸ்லா எனும் விஞ்ஞானி நம் வேதங்களில் இருந்து விஞ்ஞானத்தை நிருபிக்கும் பெரும் காரியத்தில் இறங்கியிருக்கின்றார், நம் வேதங்களெல்லாம் விஞ்ஞானம் என்பதை கணித வடிவில் நிரூபிக்கும் ஆய்வில் இறங்கியிருகின்றார், அதை அவர் செய்து முடிக்கும் பொழுது நம் வேதங்கள் எல்லாமே பழம் விஞ்ஞானம் என்பது உறுதியாகும்” ஆம் டெஸ்லாவினை பற்றி நம்பிக்கையாக எழுதினார் விவேகானந்தர்டெஸ்லா தொடர்ந்து ஆய்வுகளை செய்தார், சமஸ்கிருதம் கற்று இந்து ஆன்மீகம் படித்தபடி ஆய்வினை செய்ததால் அவரின் பேச்சில் சமஸ்கிருதமும் வந்தது, சமஸ்கிருத வார்த்தைகள் விஞ்ஞானிகளுக்கு பரிட்சயமாயிற்றுடெஸ்லா விவேகானந்தரால் அந்த அற்புதத்தை செய்தான் Long ago… [mankind] recognized that all perceptible matter comes from a primary substance, or tenuity beyond conception, filling all space, the Akasha or luminiferous ether, which is acted upon by the life giving Prana or creative force, calling into existence, in never ending cycles all things and phenomena. The primary substance, thrown into infinitesimal whirls of prodigious velocity, becomes gross matter; the force subsiding, the motion ceases and matter disappears, reverting to the primary substaந்செ.” என அவன் பிராணா ஆகாஷா என ஸ்வாமி போதித்த அதே வார்த்தைகளை விஞ்ஞான உலகுக்கு கொடுத்தான்காலங்கள் ஓடின சுவாமியினை 1893ல் சந்திக்கும் பொழுது அவனுக்கு வயது 39 சுவாமிக்கு வயது 36தொடர்ந்து சுவாமி சொன்ன ஆய்வினை செய்தான் டெஸ்லா, அவனின் கவனும் ஆய்வும் முழுக்க அதுவாயின வேறு ஆய்வுகளை குறைத்து கொண்டான், நிறைய எழுதினான்அதிலெல்லாம் சுவாமியினை மேற்கோள்காட்டியிருந்தான், சுவாமியின் விஞ்ஞான சீடனாயிருந்தான்1902ல் சுவாமி மறைந்தபொழுது அவனும் அழுதான், “அவர் மறைந்ததில் எனக்கு வருத்தம் ஆனால் மிகபெரிய ஒளியினை என்னுள் அவர் ஏற்றியிருக்கின்றார் அது மறையாது” என சொன்னான்1912ல் எடிசனுடன் தனக்கு பகிர்ந்து கிடைத்த நோபல் பரிசை அவன் மறுத்தான், ஒருவேளை அவனுக்கு தனியாக கொடுக்கபட்டிருந்தால் அவன் விவேகானந்தருக்கு அதனை சமர்பித்திருக்கலாம்விவேகானந்தரை கொண்டாடியதில் ஏற்கனவே இருந்த பகை அவனுக்கு கூடிற்றுவிஞ்ஞானத்தை ராணுவமாக பார்த்த அரசுகளும், அதை பணமாக பார்த்த வியாபாரிகளும் அவனை மறைத்தனர், அவன் புகழை மறைத்தனர்காரணம் அவன் இந்துபெருமையினை பேசதொடங்கியதால் இன்னும் மறைத்தனர்அவன் தன் ஆய்வினை கட்டுரையாக எழுதிகொண்டே வந்தான் ஆனால் அவனால் சுவாமி சொன்ன ஆன்மீகத்தின் விஞ்ஞான வடிவினை பெறமுடியவில்லைஅதே நேரம் டெஸ்லாவினை மனமார வாசித்து வளர்ந்தான் ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி அவனை போல பலர் டெஸ்லாவினை படித்தார்கள் ஆனால் டெஸ்லா அடக்கி வைக்கபட்டவன் என்பதால் வெளியில் காட்டிகொள்வதில்லைஅப்படி வளர்ந்த ஜெர்மானிய விஞ்ஞானிதான் ஐன்ஸ்டைன்அவன் டெஸ்லாவின் கருத்துக்கள் அடிப்படையில் நியூட்டனின் விதியினை திருத்தினான், ஆற்றலுக்கான பொதுவிதியினை அறிவித்தான்அந்த சார்பியல் கொள்கை உலகை புரட்டி போட்டதுஆம், ஐன்ஸ்டீன் சொன்ன கொள்கையானது சுவாமி டெஸ்லாவுக்கு சொன்ன அந்த ஆற்றல் தத்துவத்தின் விஞ்ஞான வடிவம்டெஸ்லா ஒரு கணிதவிஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு இயற்பியல் விஞ்ஞானிஎன்பதில் ஐன்ஸ்டீனுக்கு வெற்றி கிடைத்ததுஎனினும் ஐன்ஸ்டீனின் சார்பியல் தவறானது என சொல்லிகொண்டே இருந்தான் டெஸ்லா மோதல்கள் வெடித்தன, இரு விஞ்ஞானிகளுக்கும் முரண்பாடு தோன்றிற்றுஎனினும் விவேகானந்தனின் சீடன் என்பதாலும் சித்தனின் வழியில் சென்றதாலும் விஞ்ஞானம் அழிவுக்கு பயன்பட கூடாது என சொன்னதாலும் அரசாங்க விஞ்ஞான ஆய்வுகளை கண்டித்ததாலும் டெஸ்லா எனும் சித்தன் முடக்கபட்டான்1943ல் அவன் மரித்தான், சுவாமி சொன்ன ஆற்றல் வடிவினை காணாமலே மரித்தான்ஆனால் 1945ல் சுவாமி விவேகானந்தர் சொன்னது உண்மையாயிற்று, திடபொருளை ஒரு சக்தி தாக்கும் பொழுது அது பெரும் சக்தியாய் இயங்கும் அலை அலையாய் அது பெரும் சக்தி கொடுக்கும் என்பது அணுகுண்டு வெடிப்பாய் உண்மையாயிற்றுஅணுகுண்டு வெடிக்கும் பொழுதும் ஓப்பன் ஹீமர் பகவத் கீதையின் வரிக்ளை சொன்னான், ஆம் அவனும் டெஸ்லா வழியில் இந்திய ஆன்மீகத்தை கற்றிருந்தான்ஆம், விவேகானந்தர் சொன்ன இந்து ஆன்மீக தத்துவத்தின் வடிவமே பெரும் சக்தியாய் அணுகுண்டாய் வெடித்ததுஅவர் டெஸ்லாவுக்கு சொன்னதும், டெஸ்லா முயன்று முடியாமல் விட்டதையுமே ஐன்ஸ்டீன் சாதித்தான்இந்தநாள் ஏதோ சிகாகோ நகரில் இந்துசமய பெருமையினை சுவாமி பேசிவிட்டு வந்தார் என நகர்ந்துவிடும் நாள் அல்ல, விவேகானந்தர் இந்துக்களின் ஆன்மீகமெல்லாம் விஞ்ஞானம் என அறுதியிட்டு அதற்கு சாட்சியாய் ஒரு மிகபெரும் விஞ்ஞானியினை தனக்கு சீடனாக பெற்று அவனுக்கு போதித்த தினமும் கூடஉலகின் மாபெரும் விஞ்ஞானி இந்துதுறவியினை தன் குருவாக ஏற்றதும் இந்நாளேஇந்நாளில் இருந்துதான் அசையா பொருளில் இருந்து பெரும் இயங்கு ஆற்றல் சக்தி சாத்தியமா எனும் விவாதம் உருவாகி அது அணுசக்தியாய் முடிந்ததுஆம் இந்துமதம் சொன்ன ஆன்மீகம் எனும் விஞ்ஞானத்தின் ஒரு துளிதான் இது, இன்னும் ஏகபட்ட விஞ்ஞான ரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கின்றது அந்த ஞானமதம்அதனை இன்னொரு விவேகானந்தர் வந்து சொல்லும்பொழுது இன்னொரு டெஸ்லா உலகுக்கு நிச்சயம் சொல்வான், இந்துமதம் ஒன்றே உலகை அடுத்தடுத்த கட்டத்துக்கு இழுத்தும் செல்லும் எல்லா விஞ்ஞானமும் ஆன்மீகம் என இந்துமதத்தில்தான் தொடங்குகின்றன, இந்துமதத்தில்தான் நிறைவும் கொள்கின்றது