நீதிநெறி விளக்கம் : 82

நீதிநெறி விளக்கம் : 82

“கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர் – மற்றுத்தம்
கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர்
யாவர்க்குங் கேடுசூ ழார்”

கற்பில்லாத குலமகளிரை விட தன் உடலையும் அதன் இன்பத்தையும் விற்று வாழும் விலைமகளிர் மிகவும் உயர்ந்தவர்கள், கற்பில்லா குலமகள் தன் கணவன் சுற்றம் என எல்லோரையும் ஏமாற்றுகின்றாள் இன்னும் அவளால் பெரும் அவமானமும் வரலாம். ஆனால் விலைமகள் உடலை விற்பவளாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மையாக இருக்கின்றாள் அதனால் அவளே சிறந்தவள் என்பது பொருள்

உண்மை இல்லா குலமகள் தன்னை மறைத்து வாழ்வதை விட தான் இப்படித்தான் என உலகுக்கு சொல்லி உண்மையோடிருந்து யாரையும் ஏமாற்றாத‌ விலைமகள் உயர்ந்தவள் என்கின்றார் குமரகுருபரர்

தமிழக அரசியல் மொழியில் சொல்வதாக இருந்தால் நாங்கள் நாத்திக கட்சி என சொல்லும் திமுக, கடைசிவரை தங்கள் கொள்கையினை சொல்லாத அதிமுகவினை விட சிறந்த கட்சி