ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 04″
“தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது”
இக்குறள் “தனக்கோர் உருவில்லை தான் எங்குமாகி மனத்தகமாய் நிற்கும் அது” என பிரிந்து பொருள் தரும்அதாவது முக்திநிலை எனும் பெருநிலைக்கு ஒரு உருவமோ வடிவமோ இல்லை
அது எங்கும் நிறைந்திருப்பது போல மனதினுள்ளும் நிற்கின்றது, மனதால் அந்த முக்தியினை உணர்ந்து முழுமையான நிறைவை உணரலாம் என்பது குறளின் பொருள்இந்த அதிகாரம் உயர்ந்த ஞானநிலையினை போதிக்கின்றதுமுக்தி என்பது எங்கோ இருப்ப்பது அல்ல, அதற்கு உருவமும் வடிவமும் இடமும் இருப்பதல்ல,
அது உணர்வினை தாண்டிய ஞானநிலை, இதற்கு மேல் இனி உணர எதுவுமில்லை என நிம்மதியும் அமைதியும் சூழ்ந்த மிகபெரிய உன்னத ஞானநிலைஅந்த ஞானநிலையினை மனதால் அடையும் நிலையினை, அதாவது சமாதி நிலை எனும் சித்தர்கள் சொல்லும் நிலையினை இங்கு சொல்கின்றார் ஒளவையார்