நீதிநெறி விளக்கம் : 83

“முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார்
நிறையு நெடுநாணும் பேணார் – பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு”

ஒழுக்கம், தன் குடும்பபெருமை, தன் கணவனுக்கு மட்டுமே உரித்தான நிலை ஆகியவற்றை எணாமால், தனக்குள்ள பொறுப்பு தன் உடன்பிறந்த குணமான நாணம் ஆகியவற்றை நினைக்காமல் ஏதோ ஒரு காரணத்தால் மற்றொருவனோடு உறவு கொண்டாடும் பெண்களும் உண்டு, அப்படிபட்ட பெண்கள் பிறப்பே பாவம் என்பது பொருள்

தன் நிலை தன் குடும்பத்து நிலை குலபெருமை நாணம் இவற்றை மறந்துவிடும் பேதையர்கள் பாவ பிறப்பு என்கின்றார் குமரகுருபரர்

ஒழுக்க முறைமை, குடிப்பெருமை, நடத்தைப் பாங்கு, எதையும் எண்ணிப் பார்க்காமல், தனக்குள்ள நிறையுடைமை, நாணம் ஆகியவற்றையும் பாதுகாக்காமல் பிறிதொரு காரணத்தால் மற்றொருவனோடு உறவு கொள்ளும் அறியாச் செயலைச் செய்யும் மகளிர் உள்ளனர். இவர்கள் பாவம். கற்புள்ள பெண் பிறவி எடுத்ததே பாவம். ,