தேசத்தை அழித்த காதல்….
நாதா என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?
மேனகையே, இங்கே நாம் சந்தித்து பேசவேண்டாம், பலருக்கு பொறுக்காது. தனியே வா, அதோ அந்த மரத்தடியில் அமர்ந்து பேசலாம்..
வந்துவிட்டேன் சொல்லுங்கள் சுவாமி என்ன எழுதுகின்றீர்கள்?
மேனகையே நான் இந்த வார வீரசிவாஜி தொடரை இறுதி செய்து கொண்டிருக்கின்றேன்
எப்பொழுதும் ஆன்மீகம், அரசியல், வீரசிவாஜி என்றால் எப்படி நாதா? இந்த காதல் ரசம், காவிய கூட்டு, மயக்க சோறு இதெல்லாம் எழுத கூடாதா?
மேனகையே அதற்கும் எமக்கும் தூரம் அதிகம், அதெல்லாம் வராது , உனக்கு வேண்டுமானால் அறிஞர் அண்ணா எழுதிய ரோமாபுரி ராணிகள், கம்ப ரசம், கிளியோபாட்ரா போன்ற புத்தகங்களை தருகின்றேன் படித்துகொள், தமிழனுக்கு அறிவு கொடுத்தவர் ராம்சாமி, காதலை கொடுத்தவர் அண்ணா , காதல் குடும்பங்களை வளர்த்தவர் முத்தமிழ் அறிஞர் அய்யா
இப்படி பேசிகொண்டே இருங்கள், நீங்கள் மனுஷ்யபுத்திரன் போல் காதலும் எழுதுங்கள் நாதா
அவர் காதலை அணு அணுவாக ரசித்து கொலை செய்கின்றார், அவரின் கவிதைகளால் மன்மதன் தனக்குதானே தீமூட்டி செத்துபோக இருப்பதாக செய்தி தெரியுமா?
சரி அரசியல் காதல் கதையாவது சொல்லி தொலையுங்கள்..
அரசியலில் காதல் என்றால் அய்யா ராம்சாமிக்கு காதல் எல்லாம் வராது, நேரடியாக அடுத்த கட்டம்தான். அண்ணாதுரை “அவள் படிதாண்டா பத்தினி அல்ல” என்றாரே தவிர “எவள் அவள்” என சொல்லவில்லை வேறு யாரை சொல்லலாம்
இந்த எட்வினா என்பவள் யார் நாதா?
மேனகையே வா , உனக்கு அந்த அமர காதல் காவியத்தை உரைக்கின்றேன், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புத காதல் அது
சொல்லுங்கள் நாதா
அவள் 1901ல் பிரிட்டனில் பிறந்தாள் பெரும் பணக்கார குடும்பம் எனும் ஆஷ்லே குடும்பம், படிப்பெல்லாம் முடிந்து 1922ல் ராணுவ வீரன் மவுண்பேட்டனை மணந்தாள், அவன் அப்பொழுதே ராணுவத்தில் உயர்நிலையில் இருந்தான்
காதல் திருமணமா நாதா?
அப்படி தெரியவில்லை மேனகையே அந்தஸ்து பார்த்து நடந்த திருமணம் அது, அதன் பின் அவள் ராணுவ மருத்துவ சேவையில் இறங்கினாள், கணவனுக்கு துணையாக பல போர்களத்துக்கும் சென்றாள், இரு பெண்குழந்தைகளும் பிறந்தார்கள்
அவர்கள் ராணுவ தம்பதிகளா?
ஆம்,பெரிய நிலையில் இருந்த ராணுவ ஜோடிகள். அந்த பெரு யுத்தம் முடிந்த நிலையில் பிரிட்டிஷாரின் தளபதியாக பர்மா,மலேயா, சிங்கப்பூர், இந்தியா பகுதிகளின் தளபதியாக சுற்றிவந்தவன் அந்த மவுண்ட்பேட்டன்
அப்படியா?
ஆமாம், 1946ல் நேதாஜிக்கு பின் ஐ.என்.ஏ எனப்படும் அவர் படையினை சுத்தமாக ஒழிக்கும்பொருட்டு சிங்கப்பூரில் தங்கி இருந்தான் மவுண்பேட்டன், அப்பொழுதுதான் இந்தியர்கள் பிரச்சினையினை விசாரிக்க போகின்றேன் என சிங்கப்பூர் வந்தார் நேரு, அங்குதான்..
அங்கு என்னாயிற்று சுவாமி?
அந்த சிங்கப்பூரின் அரங்கதின் கூட்டத்தில்தான் 1946 ஆகஸ்டு மாதம் அவளை சந்தித்தார் நேரு, இந்திய சுதந்திரம் நெருங்கும் நேரம், இந்தியாவின் தலைவனாக கருதபட்ட நேருவின் விழிகள், இந்தியாவின் சுதந்திரத்தை காண தயாரான நேருவின் விழிகள் எட்வினாவினை நோக்கிற்று
அப்புறம்?
அன்னனும் நோக்கினாள், அவனும் நோக்கினான் இருவரும் நோக்கியபடியே விடைபெற்றார்கள், இருவரையும் மவுன்ட்பேட்டனும் நோக்கிகொண்டான், நோக்கிய விழிகள் அடிக்கடி சந்திக்க தொடங்கின
காதலா சுவாமி?
அப்படித்தான் அதனை உலகத்தார் சொல்கின்றீர்கள், விழியில் விழுந்து உயிரில் கரைந்து இதயம் தொட்ட உறவாயிற்று
அப்படியா?
ஆனால் நேருவுக்கு மட்டும்தான் அப்படியாயிற்று, அவள் ராணுவத்துகாரியம்மா எல்லா வித பயிற்சிகளும் பெற்றவள், அந்த புரட்டுக்காரியின் உருட்டு விழியில்தான் உருண்டுகொண்டிருந்தார் ஆசிய ஜோதி
அப்புறம் என்னாயிற்று சுவாமி?
அது வெள்ளையனுக்கு குழப்பமான காலம், இந்திய சுதந்திரத்தை எப்படி கொடுக்க போகின்றோம் என குழம்பிய காலம், பிரிட்டிசாருக்கு இந்தியா முழுக்க சொத்தும் தொழிலும் இருந்தன, நாளை அடிமை இந்தியா சுதந்திர இந்தியா என்றால் அவை எல்லாம் பறிபோகும், மிக வளமானநாடு என்பதால் அமைதி நிலைத்தால் தேசம் பெரும் வல்லரசாகும் இப்படி குழம்பிகொண்டிருந்தவனுக்கு லட்டுபோல் கிடைத்தார் நேருமாமா
ம்ம் சொல்லுங்கள் நாதா..
யாரை வைத்து இந்திய பிரிவினையினை செய்யலாம் என குழம்பி நின்ற பிரிட்டிஷ் மேலிடத்துக்கு எட்வினாவினை சீனியினை கண்ட எறும்பு போல் ஜஹவர்லால் சுற்றிவருவதையும், எட்வினா அவனை சாட்டையில்லா பம்பரமாக ஆட்டிவைக்கின்றாள் என்பதையும் செய்தியாக அனுப்பினார்கள்
யார் சுவாமி?
சாட்சாத் மவுண்ட்பேட்டேனேதான் அவன் ராணுவ உளவு மூளை அப்படியம்மா
இது அவமானம் இல்லையா, அவள் மனைவி இல்லையா?
பைத்தியகாரி, எவளையும் அவசரத்துக்கு உளவாளியாக்கலாம் என்பது மேல்நாட்டு வாழ்க்கைமுறை, பைபிளில் கூட அப்படி பெண் உளவாளிகள் உண்டு, அவர்களுக்கு இதெல்லாம் நாகரீகமம்மா நாகரீகம்
ச்சீ என்ன கர்மமோ?
கர்மம் அல்ல மேனகையே , தீரா அமுதம்
அடுத்து என்னாயிற்று சுவாமி?
மறு ஆண்டே 1947 மார்ச்சில் அவனை கடைசி வைஸ்ராயாக்கி இந்தியாவுக்கு அனுப்பினார்கள், அவன் வந்த இரு தினங்களில் ஜின்னா பாகிஸ்தான் கேட்க தொடங்கினான்
அப்படியா சுவாமி
ஆம், காந்தியும் நேருவும் மக்கள் பலம் மிக்கவர்களாய் உருவாக்கபட்டிருந்தார்கள், இவர்கள் இருவரும் செய்வதுதான் முடிவாய் இருந்தது, அதனை மாற்றி பிரிவினை கோரினான் ஜின்னா
இருவரும் என்ன செய்தார்கள் சுவாமி?
காந்தி மனுபென்னுடன் மன்மத ஆய்வில் இருந்தார், நேரு எட்வினா பின்னால் ஓடிகொண்டிருந்தார், தேசத்தை ஜின்னா எரிக்க தொடங்கியிருந்தான்
அய்யோ சுவாமி அப்படியுமா?
வரலாற்றை படி மேனகா அதுதான் நடந்தது, பின் பாகிஸ்தான் உருவாக்கபடும் என மவுண்ட்பேட்டன் அறிவித்தான், நேருவினை நோக்கி சிரித்துகொண்டிருந்தாள் எட்வினா, நேரு உலகையே மறந்திருந்தார்
பாகிஸ்தானை ஏன் பிரித்தார்கள் சுவாமி?
அதில் பல கணக்கு இருந்தது, சோவியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு இடைநிலம் தங்கள் காலூன்ற வேண்டும், இந்தியாவுக்கு ஒரு நிரந்தர எதிரிவேண்டும் அப்பொழுதுதான் தங்கள் காலை பிடித்து தொங்குவார்கள் என பல கணக்கு இருந்தது
ஹ்ம்ம் தேசம் உடைந்ததே சுவாமி
அது மட்டுமா உடைந்தது, இரு பக்கமும் ரத்த ஆறு ஓடியது கோடிகணக்கான இந்துக்கள் கொல்லபட்டனர், எத்தனையோ லட்சம் இந்துபெண்கள் மானமிழந்தனர் , நேரு அப்பொழுது பெரும் வருத்தமுற்று அழுது கொண்டிருந்தார்
ஆமாம் அவர் நேசித்த நாடல்லவா?
அவர் நாட்டுக்காக அழவில்லை மேனகையே, எட்வினா நாட்டைவிட்டு செல்வாளே என கலங்கி அழுதார், அழுதார் அழுதுகொண்டே இருந்தார், அழுத கண்களுடன் பிரதமரும் ஆனார்
ஏன் சுவாமி?
நமக்கென யாரம்மா தலைவர் இருந்தான்? எவன் இருந்தான்? தேசம் காந்தியினை நேருவினை நம்ப, காந்தி நடைபயணம் உண்ணாவிரதம் என மனுபென்னோடு சுற்றி ஏமாற்ற நேரு எட்வினாவினை இனி சந்திக்கமுடியாதா என ஏங்கிகொண்டிருக்க இந்துக்களின் சாவினை யாரம்மா ஏறெடுப்பர், இதையெல்லாம் காணாத அளவு காணமுடியா அளவு எட்வினா மயக்கத்தில் இருந்தாரம்மா சமாதான புறா
நாதா என்ன இது?
அதுதான் நடந்தது, தன் திட்டபடி இந்தியாவினை நாசமாக்கி துண்டாடி ரத்தத்தில் மிதக்கவிட்டு வெளியேறினான் மவுண்பேட்டன், உடன் சிரித்தபடி சென்றாள் எட்வினா
ம்ம் பின்னும் காதல் தொடர்ந்ததா?
பிரித்து வைத்தால்தானே காதல் அதிகரிக்கும், ஏர் இந்தியா அனுதினமும் இவர்கள் காதல் கடிதங்களை சுமந்தன, பிரிட்டிசு இந்திய தூதரகம் தன் கடமையினை மாற்றிற்று
அய்யோ நாதா?
பின் காஷ்மீர் யுத்தம் வந்தது, நேருவோ கடிதத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தார், எட்வினா பாதி காஷ்மீர் போதும் அன்பே என்றதும் கட்டளையினை ஏற்றும் கொண்டார், கடைசி வரை காதலும் கடிதமும் அவ்வப்போது சந்திப்புமாக அவர்கள் காதல் வளர்ந்துகொண்டே இருந்தது, நாடு குழம்பிகொண்டே இருந்தது
நேருவுக்கு ஏதோ அவள் மேல் ஈர்ப்பு அப்படித்தானே சுவாமி
அவருக்கு யார்மேல் மேனமையே ஈர்ப்பு இல்லை, அவரின் வாழ்வே காதலாகத்தான் இருந்தது, எட்வினா மேல் மட்டுமல்ல, சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு மீதும் நேருவின் மனதில் காதல் பொங்கி வழிந்தது. இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேத்தரின் ஃபைங்க் இதைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பத்மஜாவுக்கும், நேருவுக்கும் இடையிலான காதல் பல ஆண்டுகள் நீடித்ததாக, இந்திராவிடம் விஜயலட்சுமி பண்டிட் கூறியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்மஜாவை நேரு திருமணம் செய்துக் கொள்ளாததற்கு ஒரே காரணம், தனது மகள் இந்திராவின் மனம் வருத்தப்படக்கூடாது என்பது மட்டுமே.
இந்த காதலை கெடுத்த பாவம்தான் ராகுல் தலையில் விழுந்திருக்கலாம் சுவாமி
இருக்கலாம் மேனகையே, ஆனால் நேருவின் காதல்கள் ஒன்றா இரண்டா
சுவாமி, ஆதாரமில்லாமல் உத்தமன் மேல் பழிசுமத்தலாமா என்பார்களே
இந்த காதல் உலகறிந்ததம்மா, உண்மையில் அது காதல் அல்ல ஒரு ராணுவ உளவாளியின் வலையில் இந்திய தலைவன் விழுந்து தேசத்தை நாசமாக்கிய சதி. எட்வினா நேரு காதலை பல நூறு கடிதங்கள் உலகுக்கு சொன்னனது, நேரு எழுதிய கடிதங்கள் பகிரங்கமானது ஆனால் எட்வினா எழுதிய கடிதங்களை இந்திரா வெளியிடவில்லை
வேறு சாட்சி இல்லையா சுவாமி
நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையில் மிக ஆழமான காதல் இருந்ததாக எட்வினாவின் மகள் பமீலா ஹிக்ஸ் நீ குறிப்பிட்டுள்ளார் மேனகையே. மவுண்ட் பேட்டன் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில், ‘தனது உள்ளுணர்வு மற்றும் கல்வியறிவுக்கு ஏற்றதொரு துணைவராக நேருவை எனது தாயார் எட்வினா நேசித்தார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எவ்வளவு ஆழமாக நேசித்தனர்? ஒருவர்மீது மற்றவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தனர்? என்பதை நேருவின் கடிதங்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.
ஓஓ பொக்கிஷம் படத்தின் மூலகதை இதுதான் போல
ஆம், அந்த கடிதங்கள் அவ்வளவு ரசமானவை, இந்தியாவின் மொத்த மக்களும் நேருவினை நம்ப நேரு எட்வினாவினை நம்ப, எட்வினா பிரிட்டிஷ் நலனை நம்ப, இப்படியெல்லாம் சுற்றி சுற்றி நம்பிகொண்டே இருந்தார்கள்
நவபாரத சிற்பிக்குள் இப்படி ஒரு காதலா சுவாமி?
அவருக்குள் ஓராயிரம் காதலம்மா , ஒரு சாகசகாரியிடம் சிக்கி தேசத்தை நாசமாக்கிய காட்சிதான் இது
அந்த எட்வினா என்ன ஆனாள் சுவாமி
அதுதானம்மா மர்மம், 1958ல் அவள் படுக்கையிலே செத்து கிடந்தாள், வெறும் 58 வயதுதான் ஆகியிருந்தது. அவள் இறந்தபின் நேருவும் மனம் தளர்ந்தார், எட்வினா இல்லா நேரு பலமிழந்ததை உணர்ந்த சீனா அப்பொழுதுதான் படையெடுத்து புரட்டி அடித்தது, எல்லா வலிகளையும் தாங்கி வீழ்ந்தார் நேரு
அந்த காதல் ஒரு சதிதான் இல்லையா?
நிச்சயமாக, அவளை வைத்து நேருவினை ஆட்டி வைத்தார்கள், அவள் இல்லை நேருவுமில்லை. பின்னால் சாஸ்திரி வந்து சுதந்திர இந்தியாவினை உருவாக்கினார் அவரையும் மர்மமாக கொன்றார்கள்
இந்திராவுக்கு காதல் இல்லையா?
பெரோஸ்கான் என்பவனை காதலித்து திருமணம் செய்த இந்திரா பின் விரட்டி அடித்தார், இந்திரா கான் இந்திரா காந்தியாகவும் மாறி போனார்
பின் என்னாயிற்று
அடுத்த எட்வினாவாக இத்தாலி சோனியா வந்தார், அந்த இரண்டாம் எட்வினா இன்றுவரை இந்தியாவினை குழப்பிகொண்டிருக்கின்றாள், நேருவின் காதல் அவர் பேரன் வடிவிலும் வந்து இங்கு குழப்பத்தான் செய்கின்றது
எவ்வளவு கொடுமை சாமி
நல்ல வேளையாக ராகுலார்க்கு காதல் வரவில்லை, வரவும் வராது அதுதான் தெய்வத்தின் அருள் மேனகையே
சுவாமி இப்படிபட்ட மனிதரையா கொண்டாடுகின்றார்கள்?
தனிபட்ட வகையில் யாரும் அதனை குற்றம் சொல்லமுடியாது, ஆனால் எதிரிநாட்டு மேலிடத்தில், தேசமே பொங்கி எழுந்து விரட்ட போராடிய பிரிட்டன் மேலிடத்து பெண்ணிடம் இந்திய தலைவன் மயங்கி கிடந்தது எப்படியம்மா சரியாகும்?
ஆகாதுதான் சுவாமி இது சந்தேகத்துகுரியது
என்ன செய்வது மேனகையே, தேசம் ரத்த முனையில் இந்துக்களின் கண்ணீரில் ரத்தத்தில் பிரியும் பொழுது மனுபென்னுடன் மர்மதேச ஆய்வு செய்தவர் மகாத்மா, எட்வினாவுன் ஏழாம் ராகம் பாடியவர் அமைதிபுறா, பின் எங்கிருந்து இந்துநாடு அமையும் எங்கிருந்து தேசம் உருவாகும்
வரலாற்றில் இன்னும் எத்தனை மர்மங்களோ சுவாமி?
ஆமாம் மேனகையே, இவர்கள் செய்த தவற்றையெல்லாம் மோடி இப்பொழுதுதான் சரிசெய்கின்றார், 1947ல் நடக்க வேண்டியவை இப்பொழுதுதான் நடக்கின்றன இனி எல்லாம் சரியாகும்
நாதா..
மேனகையே..
நேருவுக்கெல்லாம் வரும் காதல் உங்களுக்கு என்மேல் வராதா?
அது நாட்டை கெடுத்த காதலம்மா, இது என் எழுத்தை கெடுத்துவிடுமம்மா, என்ன வரலாற்றையும் கேள் , வரலாற்று காதலை கேள், என்னிடம் மட்டும் காதலை கேட்டுவிடாதே மேனகையே….”

Super write- up ! What an creative post !
End is the punch !