ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 06

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 06

“அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்”

இக்குறள் “அனைத்து உருவமாம் ஆய அறிவை அகலில் தினைதுணையும் இல்லை சிவம்” என இக்குறள் பிரிந்து பொருள்தரும்.

எல்லா உருவமாகவும் விளங்கும் சிவத்தை அறிந்துகொள்ள முடியாமல் சிவனை தேடினால் அந்த சக்தியினை அடையவோ உணரவோ முடியாது என்பது பாடலின் பொருள்

அதாவது சிவம் எல்லா வடிவிலும் எல்லா உயிரிலும் காணபவை காணாதவை என எங்கும் வியாபித்திருக்கின்றது, அதனை உணராமல் அதனை அறிந்து கொள்ளாமல் சிவனை தேடினால் ஒருகாலமும் அந்த பரம்பொருளை அடைய முடியாது என்பது பொருள்