குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 88

எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற்
றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் – அவ்வினை
காத்த லிலரே லெனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பா ரலர்.

ஒருவன் எவ்வளவு இழிசெயல்களை செய்தாலும் பெண்களிடம் தகாத உறவை கொண்டிராதவன் என்றால் உலகம் அவனை வணங்கும், அப்படி அல்லாமல் ஒருவன் அதில் வீழ்ந்துவிட்டால் எவ்வளவு புகழ் படைத்தவனாயிலும் அவன் இழகபடுவான், இழிவான துர்குணமிக்கோரும் அவனை இழ்வார்கள் என்பது பொருள்

பெண்கள் உறவை விலக்கி ஒருவன் வாழ்வதே ஒருவனின் நிலைத்த‌ புகழுக்கு முதல்படி என்கின்றார் குமரகுருபரர்