ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 10
“உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு”
இக்குறள் “உறக்கம் உணர்வு பசி கெடபட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு” என பிரிந்து பொருள் தரும்முக்தி காண்டல் எனும் அதிகாரத்தின் கடைசி குறளாக இதனை ஒளவையார் சொல்கின்றார், முக்தி நிலை என்றால் என்ன என்பதை சொல்கின்றார்உறக்கமற்ற உணர்வற்ற பசியற்ற நிலை என்கின்றார்,
இது உடலாலும் உள்ளத்தாலும் அடையும் நிலையினை குறிப்பதுஉறக்கமும் பசியும் உணர்வு எனும் ஆசா பாசமும் மயக்கமும் சாதாரண மனிதர்களுக்குரியது, முக்தி எனும் பெருநிலையினை அடைந்தவர்களுக்கு இவை அவசியமில்லை, அவற்றில் இருந்து யோகிகள் விடுபட்டிருப்பார்கள்சில யோகிகள் உறக்கமும் உணவும் உணர்வும் இன்றி இருந்ததை காணமுடிகின்றது,
ரமண மகரிஷி கூட தன் கையின் கட்டியினை மயக்க மருந்து அல்லாமல் அறுத்து எடுக்கும்பொழுது அவர்போக்கில் இருந்தார் என்கின்றது வரலாறுஇதே காட்சியினை நேரூர் பிரம்மானந்தர் வாழ்விலும் பார்க்கமுடியும், உடலினையே வெட்டும்பொழுதும் உணர்ச்சியற்ற நிலைக்கு அந்த யோகிகள் சென்றிருந்தார்கள்திருமூலர் போன்ற பெரும் யோகிகள் உணவும் உறக்கமும் இன்றி அவர்கள் போக்கில் வாழ்ந்திருக்கின்றார்கள்
யோகத்தின் உச்சியில் இந்த உடல் மானிட கட்டுபாட்டில் இருந்து பிரபஞ்ச கட்டுபாட்டுக்கு செல்கின்றது, பிரபஞ்சம் தானாகவே தனக்கு சக்தி ஊட்டுவது போல உறக்கமும் உணவும் இன்றி மானிட உடல் பிரபஞ்சத்தில் இருந்தே சக்திகளை பெறுகின்றதுஇப்படிபட்ட உன்னதமான நிலைக்கு வரும் யோகிகள் கர்மாவினை முழுக்க களைகின்றார்கள் என்பதால் அவர்களுக்கு அடுத்த பிறவி இல்லை,
அந்நிலையே முக்தி நிலை என்கின்றார் ஒளவையார்சுருக்கமாக சொன்னால் மானிடருக்கு உரிய குணங்களையும் தேவைகளையும் ஒருவன் வெல்லும் பொழுது அந்த ஆசைகளை கடந்த நிலைக்கு செல்லும்பொழுது முக்தி அடைகின்றான் என்கின்றார் ஒளவையார்