குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 89

“பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப – ஒருவாற்றான்
நல்லாற்றி னூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றா னுய்வா ரிவர்”

எப்பொழுதும் பரபரப்பாக பல காரியங்களை செய்து இரவு பகலாக செயலாற்றினாலும் நல்லொழுக்கம் இல்லாதோரின் செயல் பாழாகும், அது பயனற்றதாகும். அவர்களை நல்லொழுக்க நெறிக்கு அழைத்தால் மனம் பதைபதைத்து வரமாட்டார்கள், அப்படிபட்டவர்கள் எப்படி உண்மை பொருளை உணர்ந்து உய்வர் என்பது பொருள்

போலியான வழிபாடும் போலியான துறவறமும் பயனற்றது அவர்களால் உண்மை பொருளை உணரவே முடியாது என்பது பாடலின் பொருள்