ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 02
“பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு”
இக்குறள் “பிறத்தல் ஒன்று இன்றி பிறவாமை வேண்டில் அறுத்து உருவம் மாற்றி இரு” என பொருள்படும்
மறுபடியும் ஒருமுறை இந்த பூமியில் பிறக்கும் நிலை வேண்டாம் என்றால் இந்த உடம்பெடுத்து பூமியில் இருக்கும் மயக்கங்களை அறுத்து தன்னை ஆத்ம நிலையில் இருப்பதாக தன்னை மாற்றி வாழவேண்டும் என்பது பொருள்
உடலுக்கும் அதை ஆட்டுவிக்கும் மாய மனதுக்குமான தொடர்பினை முறித்து தான் ஒரு ஆத்மா, தான் உருவற்ற ஒரு சக்தியின் துளிவடிவம் என்பதை நினைவில் கொண்டு, உலக பற்றுகளை அறுத்து வாழ்ந்தால் அடுத்த பிறவி வராது என்கின்றார் ஒளவையார்
ஒளவையார் சித்தரின் திருவடிகளே சரணம்..