ஆச்சரகோவை : 60
ஆச்சரகோவை : 60
“யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து”
கற்றறிந்த பெரியார்கள், அனுபவஸ்தர்கள், மூத்தவர்கள் ஆகியோர் நடந்து செல்லும்பொழுது அவர்களை நடக்கவிட்டு தான் மட்டும் குதிரை, தேர், பல்லக்கு போன்ற வாகனங்களில் அறிவுடையோர் ஏறமாட்டார்கள்
அவர்கள் வெயிலில் வாடி நடக்க அறிவுடையோர் தனக்கு குடை பிடிக்கமாட்டார்கள், அவர்கள் பாதம் மண்ணில் காயும்படி இருக்க அறிவுடையோர் தன் பாதங்களுக்கு செருப்பு அணியமாட்டார்கள்
அதாவது பெரியோர்களையும் அறிஞர்களையும் தரையில் நடக்கவிட கூடாது, அப்படி நடந்தாலும் அவர்களுக்கு
குடை பிடிக்க வேண்டும் அவர்கள் பாதம் நோகாதவண்ணம் தாங்க வேண்டும் என்பது பாடலின் பொருள், அறிவுடைய இனம் அறிஞர்களை பெரியோர்களை ஞானிகளை அப்படித்தான் தாங்கும், அன்றைய பாரதமும் அப்படித்தான் கொண்டாடிற்று