பழமொழி நானூறு : 13

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல்”

கல்வி அறிவு இல்லாதவன் தன் நுட்பமான விஷயத்தை சொல்லமுடியாது,ஒருவன் தான் நல்லவன் என தன்னை தானே சொல்வதால் அவனை எல்லோரும் எப்படி மதிப்பார்கள்?

ஒருவன் நல்லவன் என்பது அவன் நடக்கும் நடத்தையாலும் அவன் சொல்லாலும் பிறர் அறிந்து சொல்லவேண்டுமே தவிர அவனே சொன்னால் அதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்

அப்படி கல்லாதவன் தான் கற்றவன் நிறைய விஷயங்கள் தெரிந்தவன் என சொல்லிகொண்டாலும் கொஞ்சமும் அதனை யாரும் நம்பபோவதுமில்லை, அவனை ஒரு பொருட்டாக கருதுவனுமில்லை