ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 05

“சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும்”

இக்குறள் “சங்கு நிறம் போற்றவள்ச் ஒளி காணில் அங்கையிம் நெல்லியே ஆகும்” என பிரிந்து பொருள் தரும்
மூச்சுகாற்றினை சீர்படுத்தி பிரணாயாமத்தை சரியாக செய்தால் வடகலை பிங்கலை மூச்சினை கலந்து சுழிமுனை நாடியினை துலக்கினால் அங்கு ஆத்ம ஒளியினை காணலாம், சங்கின் நிறம் போன்ற அந்த வெண்சுடரை உள்ளங்கையில் நெல்லிக்கனி காண்பதை போல் காணலாம் என்பது குறளின் பொருள்

“ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே”

என திருமூலர் சொல்வதும் இந்த ஆத்ம சுடரைத்தான்
யோகத்தில் ஆத்ம ஒளியினை, சங்கின் நிறம் போன்ற அந்த சுடரை உள்ளங்கையில் நெல்லி போல காணலாம் என்கின்றார் ஒளவையார்