அண்ணே நரகாசுரன் ஒரு தமிழன்
அண்ணே நரகாசுரன் ஒரு தமிழன்
ஆஹான்
ஒரு தமிழன வடநாட்டுக்காரன் கொன்னுருக்கான் அதையும் புதுட்ரேஸ் எல்லாம் போட்டு கொண்டாடுறீங்க, நான்சென்ஸ்.. உங்கள பாத்தா வெக்க வெக்கமா வருது டேமிட் , அழனும்ணே அழனும்
ஆஹான், சரி அப்புறமா அழலாம், நரகாசுரன பத்தி சொல்லு
அவன் தமிழன், தமிழினம்
டேய் அது அவன் பேசிய மொழி, அவனுக்கு மதம்?
அது ..அது.. அவன் பிரம்மன்கிட்ட வரம் வாங்கிருந்தான்
பிரம்மன் எந்த மத கடவுள்?
என்னெண்ணே இது, அவரு இந்துமத கடவுளு, மூணுபேர்ல ஒருத்தரு, எல்லாரையும் படைக்கிறவரு, படச்சி தலையில எழுதுவாரு
நீ தான தமிழனுக்கு மதம் இல்லண்ணு சொன்னவன்
அது, பிரம்மன்னு மதம் இல்லண்ணே அது ஒரு சக்தி, அது ஒரு தெய்வம்
அதான்டா அத வேற மதத்துல சொல்றாங்களா? இல்லல்ல, அப்படின்னா அவர் இந்து தெய்வம்தான
சரி, இருந்து தொலையட்டும் ஆனா அவன் தமிழன் அவன வடக்க இருந்து வந்து கிருஷ்ணர் வஞ்சகமா கொன்னுட்டாரு
டேய் நீதான கிருஷ்ணர் கட்டுகதை அவர் கடவுள் இல்லண்ணு சொன்ன?
அண்ணே தெய்வமா கிருஷ்ணர் இல்ல , ஆனா மனுஷனா கிருஷ்ணர்னு ஒருத்தர் இருந்தாரு, அவரு தான் தமிழன அழிச்சிட்டாரு சேட்ட்….
சரி நரகாசுரன் என்ன செஞ்சான்?, அவ்வளவு அட்டகாசம் செய்யல? அவ்வளவு பேர அழிக்கல
தமிழ் பேசினா எவ்வளவு கொலையும் செய்யலாம், எவ்வளவு அட்டகாசமும் செய்யலாம் அது அவனுக்கு தமிழ் மொழி கொடுத்த உரிமை
ஏண்டா தமிழ்மொழி இப்படியெல்லாமா உரிமை கொடுக்கும்
ஆமாண்ணே…
அவன் என்னதும் செய்யட்டும்ணே, ஆயிரம் கோடி கொலை பண்ணட்டும் இவரு ஏண்ணே அவன கொல்லணும்?, அவன் தமிழ் பேசினத்துக்காக கொன்னுருக்காரு
தமிழ் பேசுறதுக்கெல்லாம் கொல்லணும்னா சென்னையில சிலர உடனே கொல்லணும், டேய் எவ்வளவு பேர் பாதிக்கபட்டு கிருஷ்ணர்கிட்ட போய் அழுதாங்க, எல்ல்லா உலகத்தையும் ஆட்டிவச்சி சூரியன் சந்திரனெல்லாம் முடக்கி வச்சா எப்படிடா?
அதெல்லாம் பேச கூடாது, அவன் தமிழன் அதனால கொன்னுட்டாங்க
சரி கிருஷ்ணர் அவன கொன்னுட்டு அவன் அரச எடுத்தாரா?
இல்ல
அவன் தமிழன்னா தமிழ்நாட்டுல கிருஷ்ணர் ஆண்டாரா?
இல்ல இங்க அவர் வரவே இல்ல
பின்ன?, ஒரு கொடுங்கோலன அழிச்சிட்டு நாட்ட நாட்டு மக்களுக்கே கொடுத்தார் இல்லியா?
ஆமாண்ணே
நீ உன்னோட
மாவட்ட செயலாளர மீறி அவர் பதவிய புடுங்கிட்டா திரும்ப கொடுப்ப?
செத்தாலும் கொடுக்கமாட்டேன்னே, எவ்வளவு கொலை விழுந்தாலும் சரி
கருணாநிதி குடும்பம் தலைவர் பதவிய திரும்ப கொடுக்கும்?
விடுங்கண்ணே, அவரே காலையில அழுத்துட்டு எழும்புவாரு
கிருஷ்ணர் திரும்ப கொடுத்தார் என்ன அர்த்தம்? அந்த மனசுதாண்டா தெய்வம்
போய்யா சங்கி
சரி, கண்ணன் வந்தது உண்மை அப்ப்படித்தான
நிச்சயமாண்ணே
ராமன் வந்ததும் உண்மை
டெபனட்லி
பின்ன ஏன் இந்துமதமே இல்ல புராணம் எல்லாம் பொய்யின்னு கிளம்புறீங்க?
சங்கிட்ட பேசமாட்டோம்ணே, வெரி சாரி
சரி எங்க போற
தீபாவளி பிசி, கறிகடையில சொல்லி வைக்கணும், பட்டாசு வாங்கணும் நிறைய வேல இருக்கு
டேய் செத்தது தமிழன்டா
அதெல்லாம் வேற இது வேற டிஸ்டர்ப் பண்ணாதீங்க…