பழமொழி நானூறு : 17

“கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து உரைப்பார், வித்தகர் -வேட்கையால்
வண்டு வழிபடரும் வாள் கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை”

தன் சொல்லினை கவனமாக கேட்போர் இருக்கும் சபைக்குத்தான் அறிவுடையோர் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்வார்கள், வண்டு தொடரும் கண்களை உடைய பெண்ணே, தன் கருத்துகள் தோற்கும் என தெரிந்தால் அதனை சபைக்கு கொண்டு செல்லமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்

இங்கு ஒரு அழகான உவமையினை சொல்கின்றார் புலவர்

“வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்” என்கின்றார், அதாவது அவளின் கண்கள் வாள் போல் நீண்டிருக்கின்றதாம், அந்த அசைந்தாடும் கருவிழிகள் பெண்வண்டு என கருதி ஆண்வண்டுகள் பின் தொடருமாம், அப்படியான அழகான கண்களை கொண்டவளாம் அந்த பெண்

சபையோர் தன் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள் என அறிந்தால் அதனை சபைக்கு கொண்டு சென்று அவமானபடகூடாது என்பது பாடலின் பொருள்