அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு..

அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு, எல்லா மதமும் மொழியும் உண்டு, வெள்ளையர்கள் சீனர்கள் கருப்பர்கள் அராபியர்கள் என எல்லா சமூகமும் உண்டு

அந்நிலையில் வெள்ளை பிரதமருக்கு மாற்றாக ஒரு ஆசிய கருப்பர் (அதாவது அவர்கள் வழமையில் வெள்ளையர் அல்லாத எல்லோருமே கருப்பர்கள்தான், அது எவ்வளவு நிறமாக இருந்தாலும் கருப்பனேதான்) பிரதமராகியிருக்கின்றார்

அதனை விட முக்கியம் ஒரு இந்து முதல் வெள்ளை கிறிஸ்தவர் அல்லாத‌ இந்து பிரதமராகியிருக்கின்றார்

ரிஷி சுணக் எனும் இந்திய வம்சவாளி இந்து அந்த சாதனையினை செய்திருக்கின்றார், 42 வயதில் பிரிட்டனின் பிரதமராகி அசத்தியிருக்கின்றார், ஒரு வரலாற்று சாதனை இது

சுனாக் என்பதை சவுணாக் என்றுதான் உச்சரிக்க வேண்டும், அந்த சமஸ்கிருத வார்த்தைக்கு பைராகி எனும் கால பைரவரின் சாயல் பொருளாக வரும், முனி எனும் வார்த்தை பொருந்தி வரும்

அவரின் முன்னோர்கள் இந்தியாவின் பஞ்சாப் பக்கம் வாழ்ந்த இந்துக்கள், அதுவும் தாய்வழிதான் இந்த சுணக் எனும் குடும்ப பெயர் அல்லது இனபெயர்

1930களில் கென்யாவில் குடியேறிய அக்குடும்பம் பின் பிரிட்டனுக்கு சென்றது, அங்கு 1980ம் ஆண்டு ரிஷி பிறந்தார், சுணக் எனும் ரிஷி வம்ச பெயரே அவருக்கு சூட்டவும்பட்டது

மிக இளம் வயதிலே பெரும் படிப்பும் பெரும் ஞானமும் பெற்ற அவருக்கு எம்பி பதவியும் அமைச்சர் பதவியும் தேடிவந்தது, இப்பொழுது சிக்கலில் இருக்கும் பிரிட்டனை அவரால் காக்கமுடியும் என பிரிட்டிஷ் மக்களும் கட்சிகளும் நம்புகின்றார்கள்

நிச்சயம் ரிஷியாலும் முடியாவிட்டால் அடுத்து தேர்தல்தான் நடக்கும், அங்கும் ரிஷிக்கு வாய்ப்பு உண்டு என்பதுதான் விஷயம்

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய அட்லாண்டிக் கடலை கடந்து வந்த கூட்டம், இங்கு இந்துக்கள் மொகலாயரோடு நடத்திய யுத்தத்தின் ஓரத்தில் தமிழகத்தில் நுழைந்து பின் மெல்ல மெல்ல ஆட்சியினையும் கைபற்றியது

ஒருவனை அடிமையாக நடத்த அவன் மனோபலத்தை உடைக்க வேண்டும் அவனை பற்றிய இழிவான சிந்தனையினை அவனுக்குள் புகுத்தவேண்டும் எனும் வஞ்சக திட்டம் கொண்ட வெள்ளை கிறிஸ்தவ கூட்டம் ஞானமும் அறிவும் மிக்க இந்த இந்துக்களை , ஆப்கானிய படையெடுப்புக்களால் வீழ்ந்த இந்துக்களை மிக இழிவாக நடத்த தொடங்கி ஆளவும் தொடங்கிற்று

“இந்தியருக்கு அறிவில்லை, இந்தியர் காட்டுமிராண்டிகள், இந்தியர்கள் அழுக்கானவர்கள், பிச்சைக்காரர்கள்” என இங்கு பிச்சை எடுக்கவந்த கூட்டம் கொக்கரித்தது

உலகுக்கே திருகுறளும், அர்த்தசாஸ்திரமும் இன்னும் பலவும் கொடுத்த இந்துக்களுக்கு ஆளதெரியாது என ஆர்பரித்தது

அப்படியே இங்கிருக்கும் செல்வங்களையெல்லாம் களைய தொடங்கிற்று, தங்கமும் வைரமும் இன்னும் பலவும் பிரிட்டனுக்கு கடத்தபட்டது

தாஜ்மஹாலையே இடித்து கொண்டு சென்று லன்டனில் கட்டுமளவு இந்திய சுரண்டல் திட்டம் அவர்களிடம் இருந்தது

அப்படிபட்ட வெள்ளை கிறிஸ்தவன் இங்கிருந்து ஒரு சில தனித்துவமான இனங்களை உலகமெல்லாம் கொண்டு சென்று தன் செல்வமும் அதிகாரமும் நிலைக்க பல குழப்பங்களை உருவாக்கினான்

அவன் அடையாளம் கண்டதில் தமிழக இந்துக்கள், சீக்கியர்கள், பிராமணர்கள் என மூவரும் சரியான தேர்வாக இருந்தார்கள்

இந்த மூவரும் கடும் உழைப்பாளிகள், அப்படியே நாயினை விட பெரிய விசுவாசிகள், நேர்மையின் சிகரங்கள், தன் எஜமானரை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் உத்தம மனம் கொண்டவர்கள்

ஆனால் இவர்களிடம் உள்ள மோசமான குணம் தாய்நாட்டை விட்டு அகலமாட்டேன் என அடம்பிடிப்பது

இப்படிபட்ட மக்களையும் தங்கம் வைரம் போல எப்படி தன்நாட்டுக்கு கடத்தலாம் என திட்டமிட்டவன் பல சமூக குழப்பங்களை செய்தான்

அதனில் வடக்கே இந்து முஸ்லீம் சீக்கிய குழப்பங்களை அவனால் செய்யமுடிந்தது, அப்படியே சாதிகளையும் தூண்டிவிட முடிந்தது

கராச்சி, லாகூர், வங்கம் என இந்த வஞ்சகம் கைகொடுத்தது

இந்து முஸ்லீம் சிக்கல் வடக்கே பெரிதான நிலையில் தெற்கே அது கைகொடுக்கவில்லை, காரணம் தென்னிந்தியாவில் இஸ்லாமியர் குறைவு

இங்குதான் சமூகநீதி கும்பலை தூண்டிவிட்டான் அம்பேத்கரும் ராம்சாமியும் நீதிகட்சியும் இதனை உரக்க பேசினார்கள், இங்கே இட ஒதுக்கீடு, பார்ப்பானிய எதிர்ப்பு விஷம் தூவபட்டது

அப்படியே நில சீர்த்திருத்தம் எனும் பெயரிலும் தொழில் எனும் பெயரிலும் தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்கு நிலமில்லாமலும் இன்னும் பலவும் இல்லாமலும் ஆக்கபட்டு அவர்கள் மனதில் பெரும் வஞ்சகம் விதைக்கபட்டது

இந்தியாவின் சாதி அமைப்பே உழைக்கும் மக்களுக்கு எதிரானது, அவர்கள் இந்துவாக இங்கு பிழைக்கமுடியாது வாழமுடியாது என பொய் நம்பவைக்கபட்டது

அதுகாலமும் எல்லா சாதியும் வாழ்ந்த பணக்கார இந்தியாவினை வெள்ளையன் சுரண்டியதால் வந்த பஞ்சத்தையும் வறுமையினையும் இந்துமதம் மேல் சுமத்தி அதை பழித்து அந்த வறுமையுற்ற மக்களை எல்லா நாட்டுக்கு இழுத்து சென்றான்

இதே கொடுமை பஞ்சாபிலும் வங்கத்திலும் நடந்தது

இப்படி சாதிகளையும் மதங்களையும் வைத்து தமிழக உழைக்கும் மக்கள், பஞ்சாபிய சீக்கியர்கள், பிராமணர்கள் என பலரை இந்ந நாட்டில் எதிர்காலமில்லாதவர்களாக ஆக்கினான், பெரும் குழப்பமே இங்கு நிலவிற்று

இந்த குழப்பத்தால் இந்த இனங்களில் பல இந்தியாவினை விட்டு கிளம்பின, வெள்ளையன் புன்னகைத்தான்

ஆனால் அவை சென்ற இடங்களில் அவர்களை தன் அடிமைகளாகவே வைத்திருந்தான் வெள்ளையன், அவனால் பல தன் காலணிகளில் இலங்கை, மலேயா, சிங்கப்பூர், பர்மா என பல இடங்களில் இவர்களால் அவன் பலனடைந்தான்

விசுவாசம், அர்பணிப்பு, குறைந்த கூலிக்கு பெரும் உழைப்பை கொட்டினார்கள் இவர்கள், இவர்கள் துன்பத்துக்கு காரணமானவே அவர்களை வாழவைத்ததாகவும் சொல்லிகொண்டான்

இந்த இடத்தில் 16ம் நூற்றாண்டில் இருந்தே பிராமணர்களை எதிரிகளாக வரிந்துக்ட்டிகொண்ட மதமாற்ற மிஷனரிகள் அடித்து ஆடினார்கள், வெள்ளை கிறிஸ்தவன் ஆட்சியில் மெல்ல கொல்லும் விஷம் போல கத்தியின்றி ரத்தமின்றி இந்துமதத்தின் அடிவேரான பிராமணர்களை வதைத்தார்கள்

அதுவரை குழந்தை, பசு, பெண்கள் என்ற வரிசையில்தான் மிக மென்மையான இனமாக பிராமணர்களை இந்து அரசர்கள் வைத்திருந்தார்கள், அவர்களுக்கு அரசனே பாதுகாப்பு

வெள்ளையன் ஆட்சியில் இது முறியடிக்கபட அபலைகளான அவர்கள் இந்துக்களாக இருந்த ஒரே காரணத்தால் ஓட ஓட விரட்டபட்டார்கள்

அவ்வகையில் யூதர்களும், பிராமணர்களும் ஒரே வரிசையே

யூதர்களுக்கு முதலில் நடந்தது இந்து பிராமணர்களுக்கு இரண்டாவது நடந்து, இருவர் துன்பத்துக்கும் ஒரே காரணம் கிறிஸ்துவம் தழுவாதது தங்கள் மதத்தில் நம்பிக்கையாய் இருப்பது

இப்படி விரட்டபட்ட பிராமணர்கள் எங்கு சென்றாலும் வறுமையிலும் போராடி தங்கள் மதம் காத்தனர், எந்த சலுகைக்காவும் உயர்வுக்காகவும் மதம்மாற சம்மதிக்கவே இல்லை

அவர்கள் நினைத்திருந்தால் மதம்மாறி பெரும் இடம் சென்றிருக்கலாம், பெரும் கம்பெனிகளை சாம்ராஜ்யங்களை அமைத்திருக்கலாம் ஆனால் மதமே பிரதானம் என நிலைத்தார்கள்

இந்த போராட்டம் பெரிது, மிக மிக பெரிது

வெள்ளையன் ஆட்சி உலகெல்லாம் நீங்கிய நிலையில் திறமைகளுக்கு வாய்ப்பு கொடுக்கபட்ட இடங்களில் இவர்கள் ஜொலிக்க தொடங்கினார்கள், அமெரிக்கா அதற்கு ஒரு நல்ல இடமாயிற்று

யூதர்களை போல இந்து பிராமணர்களும் முத்திரை பதிக்க தொடங்கினார்கள்

மதம் என்பது தங்கள் அடையாளம் அதை இழந்துவிட்டு எதை பெற்றாலும் பலனில்லை என போராடிய கூட்டம் இன்று பெரும் இடத்தில் இந்துவாய் அமர்கின்றது

என்றோ தங்கம் வெள்ளி போல கோஹினூர் போல பிராமணர்களை கடத்திய வெள்ளை உலகம் இன்று அவர்களிடமே ஆட்சியினை கொடுக்கின்றது

“இந்தியருக்கு அறிவில்லை, இந்தியருக்கு ஆளதெரியாது” என்பதெல்லாம் பொய் என்பதை அவர்களே ஒப்புகொண்டு இந்திய வம்சாவளியிடம் சரணடைகின்றார்கள்

காந்தியினை எங்களுக்கு சமமாக ரயிலில் உட்கார உனக்கு தகுதியில்லை என விரட்டிய இனம் இன்று இந்திய வம்சாவளிக்கு பிரதமர் நாற்காலியெ தருகின்றது

இந்துக்களை தரைமட்டமாக நடத்திய இனம் இப்பொழுது பெரும் கவுரவம் கொடுக்கின்றது

இந்துக்களின் 17ம் நூற்றாண்டு வீழ்ச்சிக்கு காரணம் அவர்கள் மதமோ சித்தாந்தமோ அல்ல, ஆப்கானிய படையெடுப்பாலே வீழ்ந்தவர்கள் இப்பொழுது விழித்து எழுகின்றார்கள் என உலகம் நம்ப தொடங்கிவிட்டது

எந்த லண்டலின் சவார்க்கரும் இன்னும் பலரும் போராடினார்களோ அதே லண்டனில் இன்று இந்திய வம்சாவழி ஆட்சியில் அமர்கின்றது

இந்த இடத்தில் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நினைத்து பார்க்கலாம், அவரின் ஐரோப்பிய சுற்றுபயணத்தின் பின் அவர் சொன்ன வார்த்தை இது

“ஓ.. ஐரோப்பியர்களே, நீங்கள் எங்கள் கீதை போதிக்கும் வாழ்க்கையினை சரியாக வாழ்கின்றீர்கள், நாங்கள் ஒரு காலத்தில் அப்படித்தான் வளமாக வாழ்ந்தோம், ஆனால் கீதையினை பின்பற்றுவதை கைவிட்டபின் வீழ்ந்தோம்

ஆம் உங்கள் மதமோ அன்பும் சமத்துவமுமான கிறிஸ்தவம் ஆனால் உங்கள் வாழ்வெல்லாம் கீதையின் வாழ்வு

கீதை சொன்ன நான்கு வகை வர்ணங்களையும் நீங்கள் அப்படியே பின்பற்றுகின்றீர்கள், உங்கள் நாட்டில் சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் புது புது சிந்தனைகளை தருகின்றார்கள், உங்கள் வீரர்கள் பெரும் போர் நிகழ்த்துகின்றார்கள், உங்கள் மக்கள் உழைக்கின்றார்கள், உங்கள் வியாபாரிகள் சரியான வேகத்துடன் வியாபாரம் செய்கின்றார்கள்

இதெல்லாம் எங்கள் கீதையின் சாரமே

கிறிஸ்துவம் என மதம் கொள்ளும் நீங்கள், கிறிஸ்துவின் எந்த உண்மையான கொள்கையும் பின்பற்றவில்லை அப்படி பின்பற்றியிருந்தால் பிரிட்டனை விட்டு ஒரு அடி எடுத்துவைத்திருக்கமாட்டீர்கள், இன்னொரு நாடு உங்களை ஆக்கிரமித்தாலும் அன்போடு இன்னொரு கன்னத்தை காட்டியிருப்பீர்கள்

கீதை சொல்லும் வாழ்வியல் முறையே உங்கள் வாழ்வு, உங்கள் செல்வத்தின் வளமையின் காரணமும் அதுவே

ஓ, ஐரோப்பியரே நீங்கள் இழிவாக எண்ணும் இந்துக்கள் சொன்ன தத்துவபடி வாழ்கின்றீர்கள் என்பதை மறவாதீர்கள்

இன்று எம்மதமும் எங்கள் இனமும் பழிக்கபடலாம், மிக மோசமாக இழிவாக சித்தரிக்கபடலாம், ஆனால் ஒருநாள் எங்களையும் எங்கள் மதத்தையும் உலகம் புரிந்துகொள்ளும், அப்பொழுது உலகுக்கே வழிகாட்டும் வெளிச்சமாக எங்கள் மதம் எழுந்து நிற்கும்

அந்த ஞானஜோதியில் நீங்கள் பாதைகாண்பீர்கள்

ஓ.. ஐரோப்பிய மிஷனரிகளே, ஆயிரம் கைகள் கொண்ட ராவணாலும் அசைக்கமுடியா கைலாயத்தை நீங்கள் அசைப்பீரோ, ஆசியாவினையே ஆட்டிவைத்த புத்தமதம் போல் எங்களுக்கு உங்களால் சவால் கொடுக்கமுடியுமோ

நீங்கள் காண்பது மாயை, எங்களை மதம்மாற்றுவதாக நினைந்து எங்களுக்குள் நீங்கள் கரைகின்றீர்கள், எங்களை வெற்றிகொள்வதாக கருதி உங்களை எங்களுக்குள் இழந்து கொண்டிருக்கின்றீர்கள்

எங்களை ஆள்வதாக கருதி எங்களின் உலகளாவிய எழுச்சிக்கு வழிசமைக்கின்றீர்கள், காலத்தின் கணக்கு புரியாமல் சிரிக்கின்றீர்கள்

ஆழிபேரலை காலத்தில் பின் வாங்கி பின் நாலுமடங்கு வேகத்துடன் சீறிவரும் கடல் அலை போல எங்கள் தர்மம் ஒருநாள் சீறி எழும், அதை காண்பீர்கள்

எங்கள் கீதையின் வாழ்வை அதை அறியாமலே வாழும் நீங்கள் ஒருநாள் அதனை உண்மையில் உணர்ந்து எங்கள் ஞானத்தை புரிந்துகொள்வீர்க்ள், கீதையின் மகத்துவம் ஒருநாள் உங்களுக்கு தெரியவரும் அப்பொழுது
ஆச்சரியங்கள் நிகழும், பெரும் அமைதியோடு அதை ஏற்றும் கொள்வீர்கள்”

பகவத் கீதையினை அனுதினமும் படிக்கும் அந்த ரிஷி சுணக், இந்து இனம் பல்லாயிரம் தலைமுறையாக காத்துவரும் பாரம்பரியத்தில் தான் ஒரு இந்து, வெள்ளையன் அழிக்க நினைத்த இந்து என சொல்லி பிரதமர் நாற்காலியில் அமரும் அந்த ரிஷி எல்லா பலமும் அருளும் பெறட்டும்

நிச்சயம் அவரால் பிரிட்டன் நலத்துக்குத்தான் உழைக்கமுடியும், பிரிட்டன் மக்களை வழிநடத்ததான் அவர் நியமிககபட்டிருக்கின்றார், அவரால் இந்திய தேசம் பெரும் நலனும் பலமும் பெறமுடியாது

அவர் பிரதமரானவுடன் நாளையே பிரிட்டனின் யூரோ பைட்டர் விமானமோ இல்லை பெரும் ஆயுதமோ இந்தியாவுக்கு வராது, இந்தியாவுக்கு இன்றுவரை பிரிட்டனின் அரசியல் என்னவோ அதைத்தான் இவரும் செய்யமுடியும்

ஆனால் இந்துமதம் ஒரு அடையாளம் பெறும், அவர் அனுதினமும் படிக்கும் கீதை பெரும் கவனம் பெறும், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பெரும் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும்

பெரும் சூறாவளி வீசும் காலத்தில் அந்த பிரிட்டனின் கப்பல் இந்த 42 வயது இந்து இளைஞன் கையில் கொடுக்கபடுகின்றது, எல்லா சவாலையும் கடந்து சரித்திரம் படைக்க அந்த தூய இந்துவுக்கு எல்லா தெய்வமும் அருள் புரியட்டும்

இந்தியா எனும் தேசத்தை காப்பவனும் பூரண இந்து என்பது போல பிரிட்டனை காப்பவனும் இந்து என வரலாறு எழுதட்டும் , சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் உண்மையாகட்டும்

சுணக் எனும் முனிவன் இந்துமத பெருமைகளை விவேகானந்தர் போல ஐரோப்பா எங்கும் பரப்பட்டும்..