கோவை கார் …

தீபாவளியன்றுமாக வந்த அதிர்ச்சி செய்தி அது, எவ்வளவு பெரிய சதியில் இருந்து கோவை தப்பியிருக்கின்றது எனும் தெய்வாதீனமான காவல் செய்தி அது

அந்த சதியினை சர்வ வல்லமை பொருந்திய என்.ஐ.ஏ தடுக்கவில்லை, மாநில காவல்துறை உளவுதுறை தடுக்கவில்லை, இதனை தடுத்து காத்திருப்பது அந்த கோட்டை ஈஸ்வரர் எனும் காவல் தெய்வம்

ஆம், அந்த சதிகாரனின் கார் கனத்த வெடிபொருளோடு அந்த கோவிலை கடக்கும்பொழுது வெடித்திருப்பது சாதாரணம் அல்ல, இந்துக்களை போல அவர்களின் தெய்வமும் விழித்துகொண்டது என்பதன் அறிகுறி

1998 கோவை வெடிகுண்டு கொடூரத்தை மறக்கவே முடியாது, தென்னக வரலாற்றிலே முதன் முறையாக மக்கள் அதுவும் இந்துமக்கள் கொத்து கொத்தாக நொடியில் கொல்லபட்ட கொடூரம் அது

அப்படிபட்ட திட்டம் 2022ல் மறுபடியும் அரங்கேற இருந்தது என்பதுதான் தமிழக திமுக ஆட்சியின் பலவீனத்தை காட்டுகின்றது

அன்று 1998லும் அதே திமுக ஆட்சி, இன்றும் அதே திமுக ஆட்சி

ராஜிவ் கொலைகாரனை மாகாண முதல்வரே கட்டி தழுவி வரவேற்கும் மாகாணத்தில் , அந்த 1998 குண்டுவெடிப்பு குற்றவாளி ஒருவன் கூட தண்டிக்கபடாத தமிழகத்தில், அதுவும் திமுக ஆட்சியில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்

நாம் தமிழக காவல்துறை அறிக்கைபடியும் தமிழக ஊடக செய்திகள்படியும் பால்ரஸ் குண்டுகளும், ஆணிகளும், இன்னும் பெரும் சேதம் விளைவிக்கும் வெடிபொருளும் கைபற்றபட்டதாக அறிகின்றோம்

இவற்றை வைத்து பார்த்தால் இதனை கொண்டு கட்டடம் கட்ட முடியாது, பெரும் வளர்ச்சி பணி செய்யமுடியாது, செய்யகூடிய ஒரேவிஷயம் சக்திவாய்த குண்டுகளில் இவற்றை கலந்து மக்கள் பெரும்பான்மையினரை கொல்வது

இந்த ஆணிகளும்,பால்ரஸ் குண்டுகளும் தூக்கி வீசபடும்பொழுது மக்களின் உடலில் ஆழ ஊடுருவி உடனே சாவை ஏற்படுத்தகூடியவை, வெடியால் செத்தவர்கள் கொஞ்சம் என்றால் இவ்வகை நுண்ணிய கலவையால் சாக இருப்பவர்கள் பல மடங்கு அதிகம்

அவ்வகையில் இது மிகபெரும் தேர்ச்சிபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கான முன்னோட்டம்

விஷயம் சொல்வது இதுதான்

தமிழகத்தில் தீவிரவாத அபாயம் நீடிக்கின்றது, உலகளாவிய இயக்கங்களின் ஊடுருவல் தமிழகத்தில் இன்னும் இருக்கின்றது

தமிழகத்தினை பொறுத்தவரை என்.ஐ.ஏ செயல்பாடுகளால் முழு வெற்றி அடையமுடியவில்லை முழுக்க களையெடுக்க முடியவில்லை

மாகாண காவல்துறையும் முந்திகொள்ளவில்லை, மாகாண காவல்துறையும் உளவுதுறையும் தோல்வி அடைந்திருக்கின்றது, தெய்வாதீனமாக ஏற்பட்ட வெடிவிபத்தே உண்மையினை காட்டியிருக்கின்றது

ஆக மத்திய மாநில உளவுதுறைகள் பெரும் தோல்வி அடைந்திருக்கின்றன‌

இங்கு அவசிய தேவை கோவையில் என்.ஐ.ஏ அலுவலகம் திறக்கபட வேண்டும் அது அல்லாது இனி இங்கு பல விஷயங்களை தடுக்க முடியாது, வெள்ளம் சென்றபின் அணைமூடி பலனில்லை

மாகாணம் பெரும் ஆபத்தில் இருப்பதை உணரமுடிகின்றது, காவல் மற்றும் உளவுபடைகளின் தலைவரான தமிழக முதல்வர் இதுபற்றி வாயே திறக்காதது ஆச்சரியம், எதிர்கட்சிகள் முழு வெள்ளை அறிக்கை கேட்க வேண்டும்

ஆறுமுகசாமி கமிஷன் என்பதிலே இருந்திராமல், ஒரு மாதத்தில் இந்த சம்பவத்தின் மூலத்தை கண்டறிந்து அறிக்கை கொடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் அதற்கு எதிர்கட்சிகளும் நெருக்கடி கொடுக்க வேண்டும்

அது அல்லாவிடில் பெரும் விபரீதங்களை தடுக்கவே முடியாது

தெய்வம் தன் ஆலய வாசலிலே அபாயமணி அடித்துவிட்டபின்பும் எல்லோரும் யோசித்துகொண்டிருந்தால் நடக்கபோகும் விபரீதங்கள் சொல்லி மாளாது

என்.ஐ.ஏ அமைப்பும் , மாகாண காவல் அமைப்புக்களும் அதிகார பீடங்களும் முழு விழிப்பில் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இதுதான்

இவ்வளவு நடந்தும் பழனிச்சாமி தவிர பாஜக உள்பட எந்த கட்சியும் வாயினை திறக்காததும் அரசுக்கு நெருக்கடி கொடுக்காததும் சம்பவ இடத்துக்கு செல்லாமல் இருப்பதும் சரியல்ல, மாகாண அமைதியும் பாதுகாப்புமே முதல் அத்தியவாசியம், அதை உறுதிபடுத்துதல் வேண்டும்