ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 10

“ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்”

இக்குறள் “ஆதிஒளியும் ஆகி ஆள்வானும் தான் ஆகி ஆதி அவனும் உருவுமாம்” என பொருள்.

இந்த ஒளிமிக்க ஜீவாத்மா எங்கிருந்து வந்ததோ அதுவே மூல ஒளியாகும், அந்த மூல ஒளியே பரமாத்மாவும் உலகை ஆள்பதாகவும், ஆதியும் பரம்பொருளாகவும் இருக்கும் ஈசன் என்பது பொருளாகும்

இங்கு ஆதி என்பது சிவபெருமானை குறிக்கின்றது, இந்த ஆதி எனும் வார்த்தையினை ஒளவையின் சீடரான வள்ளுவனும் தன் குறளின் தொடக்கத்தில் சொல்லியிருக்கின்றான், அவ்வகையில் வள்ளுவன் சொன்ன ஆதியும் ஈசன் எனும் சிவபெருமானே

ஜீவாத்மா பரமாத்மாவில் இருந்து வந்ததால் அதுவும் ஒளிமிக்கது, அந்த பரமாத்மா உலகாளும் ஈசன் ஒளிமிக்க ஈசன் என்பது பாடலின் பொருள்