ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 01

“பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்”

அதாவது எட்டு திசையும் அப்படியே மேல் கீழ் எனும் பத்து திசையும் பரந்த கடலும் கொண்ட இந்த நிலமெல்லாம் சிவம் எனும் பெரும் சக்தி வியாபித்து கலந்திருக்கும் என்பது பாடலின் பொருள்

இந்த உலகம் பஞ்ச பூதத்தினாலானது, சிவன் பஞ்சபூத வடிவம் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த சிவன் இந்த பூமியாக இருக்கும் நேரம் அதை தாண்டிய பிரபஞ்சமாகவும் இருக்கின்றார் என்கின்றார் ஒளவையார்

இந்த பூமி, இந்த பிரபஞ்சம் இந்த பூமியின் ஒவ்வொரு அணுக்கள் என எல்லாமே சிவம் , எங்கும் வியாபித்திருக்கும் அந்த பெரும்சக்தி சிவம், காண்பவை காணாதவை எல்லாமே சிவம் என்கின்றார் அந்த ஞானமூதாட்டி