ஹர்தீப்சிங் பூரி

நேற்று சென்னை மெட்ரோ ரயில் அலுவகம் திறப்புக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, முக ஸ்டாலினுடன் சேர்ந்து அதை திறந்து வைத்தார்

பூரிக்கும் ஸ்டாலினுக்குமான தொடர்பு ஒரு வகையில் புன்னகைக்க வைப்பது, நடந்த வரலாறு அப்படி, அதனால் உருவாகிவிட்ட கோரங்கள் அப்படி, அதையெல்லாம் தாண்டி எதிரும் புதிருமானவர்கள் இனைந்து நின்றதெல்லாம் புன்னகைக்க வேண்டிய இடங்கள்

அந்த பூரி ஒரு சீக்கியர், இன்றைய ஜெய்சங்கரை போல அன்று உலக அரசியலில் தேர்ந்தவராக இருந்தார் இதனால் இந்திய அயலக உறவில் முக்கிய பொறுப்பில் இருந்தார்

இவர்தான் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ராஜிவ் காந்தியும் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் தொடர்பாக முறுக்கி கொண்ட காலங்களில் அவர்தான் களத்தில் இருந்தார்

இலங்கையில் இருந்து பிரபாகரனை அவர்தான் நம்பி அழைத்து வந்தார், இந்த பூரியிடம்தான் “ஈழமக்களின் தலைவனை உங்களிடம் ஒப்படைக்கின்றோம்,அவரை நீங்கள் பத்திரமாக அழைத்துவர வேண்டும்” என சத்தியம் வாங்கி அனுப்பினார் மாத்தையா

இந்த பூரிதான் டெல்லி அசோகா ஹோட்டலில் ராஜிவ்காந்தியும் பிரபாகரனும் முறுக்கி கொண்டபொழுது எம்ஜிஆர், பண்ருட்டி ராமசந்திரனையெல்லாம் அழைத்து சமாதானம் பேசினார்

கடைசியில் பிரபாகரன் முரண்டுபிடித்து, ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தபொழுது, அமைதியாக அதனை எடுத்து கொண்டு வெளியேறிய பூரி சில நொடிகள் கழித்து திரும்பி வந்து சொன்ன வார்த்தைதான் வரலாற்றில் நின்றது

“மிஸ்டர் பிரபாகரன், உலகில் எந்தநாடு தலையிட்டாலும் உங்களுக்கு கிடைக்க கூடிய உச்சபட்ச தீர்வு இப்போதைக்கு இதுதான், இதை ஏற்றுகொண்டால் பின்னாளில் நல்லது நடக்கும், இதை நீங்கள் ஏற்றுகொள்ளாவிட்டால் பெரும் அழிவுதான் மிஞ்சும்

அந்த அழிவில் உங்கள் கனவும் லட்சியமும் பறிபோகும், பல லட்சம் மக்கள் பாதிக்கபட்டு பெரும் குழப்பமே மிஞ்சும், இருளான எதிர்காலம் உருவாகும்

நீங்கள் நினைக்கும் தனிநாடு அமைய இது காலம் அல்ல‌”

ஆனால் அகங்காரமிக்க பாலசிங்கம் சொன்னான் “வெளியே செல்லுங்கள், இதனைவிட நல்ல முடிவினை எங்கள் தலைவர் செய்து காட்டுவார்”

அதன்பின் பூரி அரசியல் பேசவில்லை தான் ஏற்றுகொண்ட பொறுப்புபடியே பிரபாகரனை பத்திரமாக இலங்கையில் கொண்டு சேர்த்துவிட்டு திரும்பினார்

பின் நடந்தது எல்லோரும் அறிந்தது

சரி, பூரிக்கும் ஸ்டாலினாருக்கும் என்ன தொடர்பு?

பூரி இப்படி இந்திய அரசின் பிரதிநிதியாக பிரபாகரனுடன் மன்றாடியபொழுது தமிழகத்தில் தனி ஈழம் என்றும் அதனை தவிர தீர்வு இல்லை எனவும் திமுக குட்டிகரணம் அடித்து கொண்டிருந்தது

கருணாநிதி, முரசொலிமாறன், கோப்பால்சாமி ஆகியோரெல்லாம் வரிந்து கட்டி தனி தமிழீழம் என ராஜிவினையும் காங்கிரசையும் சுற்றி வளைத்து அடித்த நேரமிது, மாகாணமெங்கும் ராஜிவ் எம்ஜிஆருக்கு எதிரான அரசியலாக விஷயத்தை பெரிதாக்கி அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது

அந்த திமுகவில் இருந்து ராஜிவ், தீட்சித், பூரி என எல்லோரையும் கண்டித்து கொண்டிருந்தவர்களில் ஸ்டலினாரும் ஒருவர்

நடக்கும் களபேரங்களுக்கு திமுகவும் காரணம் தமிழகம் கொடுக்கும் ஆதரவில்தான் பிரபாகரன் ஆடுகின்றான் என்பதை அறிந்தவர்களில் பூரியும் ஒருவர்

பின் பூரி 1990க்கு பின் ஈழவிவகாரங்களில் அதிகம் தென்படவில்லை, 2013ல் பாஜகவில் சேர்ந்தார் அனுபவம் வாய்ந்த அவரை விமானதுறை, வீட்டுவசதி துறையில் அமைச்சராக்கி தன்னோடு வைத்து கொண்டார் மோடி

அந்த பூரிதான் நேற்று சென்னைக்கு வந்து ஸ்டாலினாரோடு திறப்பு விழாவில் கலந்து கொண்டார், இருவர் மனதில் என்னென்ன சிந்தனை ஏற்பட்டிருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்

இதே திமுக 2006ல் புலிகளை கைவிட்டதை நினைத்த பூரி, இதனை 1987லே திமுக செய்திருந்தால் அழிவு மிஞ்சியிருக்கும் ராஜிவும் செத்திருக்கமாட்டார் என எண்ணியிருக்கலாம்

ஸ்டாலினாருக்கு வெளியில் சொல்லமுடியா சங்கடம் இருந்திருக்கலாம்

எனினும் பிரபாகரனிடம் பூரி சொன்ன வார்த்தைகள் நித்திய நிரந்தரமானவை, கடைசியில் அதுதான் நடந்தது

“”மிஸ்டர் பிரபாகரன், உலகில் எந்தநாடு தலையிட்டாலும் உங்களுக்கு கிடைக்க கூடிய உச்சபட்ச தீர்வு இப்போதைக்கு இதுதான், இதை ஏற்றுகொண்டால் பின்னாளில் நல்லது நடக்கும், இதை நீங்கள் ஏற்றுகொள்ளாவிட்டால் பெரும் அழிவுதான் மிஞ்சும்

அந்த அழிவில் உங்கள் கனவும் லட்சியமும் பறிபோகும், பல லட்சம் மக்கள் பாதிக்கபட்டு பெரும் குழப்பமே மிஞ்சும், இருளான எதிர்காலம் உருவாகும்

நீங்கள் நினைக்கும் தனிநாடு அமைய இது காலம் அல்ல”

சரி, இப்படி பூரியும் ராஜிவும் திமுகவும் மல்லுகட்டியபொழுது அங்கிள் சைமன் அருளானந்தம் எங்கிருந்தார்?

அவர் சிறுவனாக‌ சிவகங்கை அருகே கிராமத்தில் பூரி வட்டமாக இருக்குமா? சதுரமாக இருக்குமா? சட்னி வைத்து சாப்பிட வேண்டுமா இல்லை உள்ளே கோழி இருக்குமா என சிந்தித்து கொண்டிருந்தார்.