மருது சகோதரரர்கள்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது.

தமிழகத்தில் மிகபெரிய போர்குரலாக அவர்கள்தான் விளங்கினார்கள், ஆங்கிலேயன் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர்களில் முக்கியமானவர்கள் அவர்கள்

அவர்கள்தான் இங்கு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என முதலில் சொன்னவர்கள், தேசத்துக்காக பெரியமருதுவும் கோவிலுக்காக சின்னமருதுவும் உயிரையே கொடுத்தார்கள், அந்த வீர அடையாளம் அவர்கள்

சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், எடைமிக்க பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

அக்காலத்தில் மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு (இப்பொழுது கானாடு) என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட அவர்களுக்கு அஞ்சி இருக்கின்றன.

முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் மலைகளிலும் வைத்து காத்தவர் அவர்களே

ஹைதர் அலியினை மொகலாய சாம்ராஜ்யதொடர்ச்சியாக விலக்கித்தான் முதலில் மருதுக்கள் வைத்திருந்தனர், ஆனால் வெள்ளையனை எதிர்க்க வேறுவழி அவர்களுக்கு தெரியவில்லை என்பதால் கவனமுடன் ஆதரவினை மட்டும் பெற்றனர்

நாளையே வெள்ளையன் வீழ்ந்தால் ஹைதர் தங்கள் மேல் பாய்வான் என தெரியும் என்பதால் கவனத்துடனே அவனை கையாண்டனர்

பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி மறுபடியும் வேலுநாச்சியாரை அரசி ஆக்கியதும் அவர்களே
வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக வெள்ளையனை எதிர்த்து நின்றதும் அவர்களே

ஆம், சிவகங்கை அரசின் முத்துவடுகநாதர் அவரை தொடர்ந்து வேலு நாச்சியார் என இருவருக்கும் துணையாய் இருந்து போர் நடத்திவிட்டு அவர்கள் இல்லா காலங்களில் 3ம் அலையாக போரை தொடங்கியவர்கள் இவர்கள்தான்

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் மவுண்ட் பேட்டனே வாசித்தார்.

நிச்சயம் அவர்களை வெல்ல வெள்ளையனால் முடியவில்லை ஆனால் மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பின்னும் அகபடவில்லை, ஆனால் கோவில்களுக்கு அள்ளி கொடுத்தவர்கள் மருதுபாண்டியர். அதுவும் காளையார் கோவில் கோபுரம் அவர்களால் கட்டபட்டது.

மருதுபாண்டியரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது.

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் வெள்ளையரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்
அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் வெள்ளையர்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்து, தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் வெள்ளையனிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் வெள்ளையன் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

மருதுக்களுக்கு கடல்படையும் இருந்திருகின்றது, ஆங்காங்கே வெள்ளையனை கடலில் அடித்த வரலாறும் உண்டு, ஆனால் அது மறைக்கபட்டது

மருதுக்களின் கடல் போருக்கு பின்பே இந்தியர் கடல் கலன் செய்ய கூடாது, கப்பல் கட்ட கூடாது என சட்டம் இயற்றியிருக்கின்றான் வெள்ளையன் என்பது வரலாறு

களறியும் தமிழரின் கப்பல் கட்டும் தொழிலும்இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, வெள்ளையனின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

(இம்மாதிரியான தமிழக அடையாளம் எல்லாம் மீட்டெடுக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை)

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை வெள்ளையன் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை வெள்ளையர் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், மலேசிய பினாங்கு நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் மருதுபாண்டியர் நினைவும் வரும்.

அவர் பெயர் துரைச்சாமி, இன்றும் மலேசிய பழமை தமிழ் குடும்பங்களில் மூத்தவன் பெயர் துரைசாமி.
மறக்க முடியா வீரமும் தியாகமும் அந்த மருதிருவருடையது

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம்,

ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்
.
கடைசியாக ஒன்றை சொல்லலாம்

மருதிருவரை வெள்ளையன் தனியாக கொல்லவில்லை அவனின் விசுவாசிகள் பங்காளிகள் இன்னபிற மக்கள் என கிட்டதட்ட 800 பேரை மொத்தமாக கொன்றிருக்கின்றான்

ஜாலியன் வாலாபாக் கொடுமைக்கு சற்றும் குறையாத கொடூரம் அது

விட்டால் எவனாவது ஒருவன் பழிதீர்க்க கூடும் என்பதும் எதிரியினை மொத்தமாக அழி என்பதும் அரசியல் கணக்கு, ஆனால் பெரியமருதுவின் மகனை கொன்றால் அது வேறுமாதிரி ஆகும் என்பதாலும் அவன் பாலகன் என்பதாலும் அதாவது அரசனின் வாரிசை ஒழிப்பது அக்கம் பக்கமும் அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் நாடு கடத்தினான்

திப்புவின் வாரிசுகளை கூட வேலூரில் சிறைவைத்தனர் வெள்ளையர்

ஒரு சில கோஷ்டி சொல்லிகொண்டிருக்கும் “அய்யயோ அவன் ஆண்டான் நாங்கள் அடிமை, அப்படி அடிமை இப்படி அடிமை எங்களுக்கு அது இல்லை இது இல்லை.” என ஏக புலம்பல்கள் புலம்பும்

ஆனால் அரசனோ ஆண்ட வர்க்கமோ, நாட்டுக்கு ஆபத்து என்றால் அவர்கள்தான் மொத்தமாக செத்த்திருக்கின்றார்கள், வாரிசே இல்லாமல் அழிந்திருக்கின்றார்கள்

மற்ற எல்லா இனமும் சுகமாய் பாதுகாப்பாய் அடுத்த ஆட்சிக்கு நகர்ந்திருகின்றன‌

ஆள்வதும், அரசனாய் இருப்பதும் அதில் பாதுகாப்பாய் இருப்பதும் சுலபலமல்ல, நிம்மதியான வாழ்வும் அல்ல
நிம்மதியாக ஆண்டு நிம்மதியாக ஓய்ந்த அரச இனம் ஆண்ட இனம் என எதுவுமில்லை, ஒருவகை சாபமான வாழ்வு அது. அதை கரித்து கொட்டுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை

அவர்கள் நாட்டுக்காய் ஆண்டார்கள், காவல் காத்தார்கள், ஆபத்தென்றால் குடிகளுக்காக செத்தார்கள்
மருதுபாண்டியரோடு செத்த அந்த 800 பேரோடு பல நினைவுகள் இந்நாளில் வருகின்றன, எல்லோருக்கும் ஆழ்ந்த அஞ்சலி

அந்த காளையார் கோவிலின் மேல் எம் நினைவினை நிறுத்தி சொல்கின்றோம், ஒருநாள் இங்கே தேசியமும் தெய்வீகமும் மலரும், அன்று இந்த மண் இவர்களை இன்னும் கொண்டாடும்

அந்நேரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் “மாவீரர் மருதுபாண்டியர் கோட்டை” என மாற்றபடும், அந்த மாவீரர்களுக்கும் அவர்களோடு செத்த 800 வீரமக்களுக்கும் மிகபெரிய அஞ்சலியாக அது அமையும்

அமைந்தே தீரும், காளையார் கோவிலில் அன்றொருநாள் இந்த கொடுமையெல்லாம் கண்ட தெய்வம் அதற்கு பரிகாரமாக இந்த அஞ்சலியினை செய்ய துணைவந்தே தீரும்

ஆம், அந்த ஜார்ஜ் கோட்டைக்கு மாவீரர் மருது சகோதரர்கள் பெயரை சூட்டியே தீரவேன்டும். அக்கோட்டை இங்கே சுரண்டபட்ட செல்வத்தில் இங்குள்ள மக்களால் கட்ட்பட்டதே அன்றி ஆங்கிலேயன் அங்கிருந்து கொண்டுவந்த பணத்தில் கட்டபட்டது அல்ல‌

அக்கோட்டைக்கு மருதிருவர் பெயரை சூட்ட எந்த தயக்கமோ சந்தேகமோ துளியும் இல்லை, அவர்களை விட பொருத்தமான பெயரும் இல்லை

அந்நிய கிறிஸ்தவ தேசத்தவனால் கொல்லபட்ட இந்து மன்னர்களுக்கு, இந்து கோவிலை காக்க உயிர்விட்ட அந்த ஆயுதம் ஏந்திய சைவ‌ நாயன்மார்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்