கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம்

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம், கீழடியில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என சொல்லிகொள்கின்றார்கள்

இப்படி பல ஆயிரம் கால வரலாற்று இடம் என சொன்னால் யார் செல்வார்கள்? யார் பாதுகாப்பார்கள்

ஆனால் பலகோடிரூபாய் பெறுமான இடம் என்றால் பிளாட் போட்டு விற்றுவிட்டு அமைதியாக இருப்பார்கள் அப்படிபட்ட தமிழகம் இது

அதனை இது பழம்பெருமை மிக்க இடம் என சொன்னால் தமிழன் பாதுகாப்பானா? நெவர். மாறாக என்ன செய்ய வேண்டும், அருமையான யோசனை என்னவென்றால் நயந்தாராவினையோ, திரிஷாவினையோ கொஞ்சம் அப்பக்கம் நடமாட வைத்தால் போதும்

அய்யகோ இது நயன் நடந்த இடம் என வேலிபோட்டு பாதுகாப்பார்கள், அதுவும் நண்பர் Babu Rao போன்றவர்கள் கிட்னியினை விற்றாவது அந்த இடத்தினை வளைத்துபோட்டு மண்ணை தொட்டு வணங்கிகொண்டிருப்பார்கள்

அந்த இடம் அப்படியே பாதுகாக்கபடும்

இம்மாதிரி ஐடியா எங்கே உதித்தது என்றால் பத்மநாபபுரம் எனும் கலைநயமிக்க அரண்மனை உண்டு, மிக அழகான அரண்மனை அது, ஆனால் அதில் மார்த்தாண்ட வர்மா அமர்ந்த இடமென்றோ, மகாராணி குளித்த குளம் என்றோ யாரும் சொல்வதில்லை

வருஷம் 16 படம் அங்கே எடுக்கபட்டதால் அங்கு சகலமும் குஷ்பூ அடையாளம், இது குஷ்பூ அறை, இது குஷ்பூ சேர், இது குஷ்பூ திண்ணை, இது குஷ்பூ குளித்தகுளம் என அடையாளத்தையே மாற்றி இருந்தார்கள், அதாவது சுற்றிபார்க்க வந்தவர்கள் அப்படி பெயரிட்டு இருந்தார்கள்

இன்னும் 4 படம் அங்கே எடுக்கபட்டிருந்தால் அது குஷ்பூ அரண்மனையாகவே மாறியிருக்கும்

இப்படி தமிழனை எப்படி கொண்டு செல்லவேண்டுமோ அப்படி கொண்டு செல்லவேண்டும், இதோ கீழடியில் மாய்ந்து மாந்ந்து தோண்டி எவ்வளவு தொன்மையான பொருளை எடுத்தார்கள்? ஒரு கூட்டம் வந்ததா? வராது

இதே ரஜினிகாந்தும் எமிஜாக்சனும் ஆடுகின்றார்கள், கமலும் பூஜாகுமாரும் தோண்டுகின்றார்கள், நயந்தாரா மண்வெட்டி எடுத்து கீழடி புதையலை தோண்டுகிறார் என செய்தி வரட்டும், இந்திய ராணுவமின்றி கூட்டத்தை சமாளிக்கமுடியுமா?

இதுதான் தமிழகம், அப்படி ஆக்கி வைத்திருக்கின்றார்கள்

இதில் கீழடியாம், பொருளாம், நாகரீகமாம் மியூசியமாம் நடக்குமா?

இதில் தமிழனின் அடையாளத்தை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம், ஒரு எதிர்ப்புமில்லை

இந்த ரமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜி ராமசந்திரனின் நினைவு பொருட்களை, (அதில் சரோஜாதேவி லிப்ஸ்டிக் டப்பாவும் இருக்கலாம்) இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியுமா?

விட்டுவிடுவானா தமிழன், மாநிலமே பற்றி எரியும்

நாளையே நடிகர்கள் சொந்த ஊருக்கு திரும்பவேண்டும் என அரசு ஆணையிடட்டும்,

ரஜினியினை மைசூருக்கு விடுவார்களா?

இல்லை நாம்தான் நயந்தாராவினை கேரளாவிற்கு அனுப்பிவிடுவோமா?

எமிஜாக்சனே லண்டனை மறந்துவிட்டு சென்னை குடிமகள் ஆகிவிட்டால் போல, காரணம் அங்கு நடிகைகளை யார் கண்டுகொள்வர்? இங்கு வணங்குகின்றனர்

அம்மணி இனி கட்சியில் சேர்ந்து அரசியல் செய்தாலும் ஆச்சரியமில்லை,

ஆக கீழடி தமிழனின் தொல் பொருட்கள் எங்கும் செல்லட்டும்,

நாம் நடிகர் நடிகையரின் காலின் கீழடியில் அமர்ந்துகொள்ளலாம், அதுதான் நமக்கு மகா முக்கியம்