கீர்த்தி சுரேஷுக்கு கோயில்

கீர்த்தி சுரேஷுக்கு கோயில் கட்டபோவதாக செய்தி

# எவரெஸ்ட் சிகரத்தில் எத்தனை பேர் கொடி நாட்டினாலும் டென்சிங்கிற்கு இருக்கும் வரலாறே தனி, எத்தனை கப்பல் இந்தியா வந்தாலும் வாஸ்கோடமாகா கப்பலுக்கு இருக்கும் மரியாதையே தனி

எத்தனை டோனி வந்தாலும் முதலில் கோப்பையினை வென்ற கபில்தேவின் முத்திரையே தனி

அப்படி எத்தனை நடிகைகளுக்கு கோயில் கட்டினாலும், குஷ்பூவிற்கு நிலைத்து நிற்கும் புகழே தனி

எத்தனை கோபுரங்கள் கட்டபட்டாலும் ராஜகோபுரம் நிச்சயம் குஷ்பூவே

கோயில் கட்டபட்ட நடிகை எல்லாம் குஷ்பூவாக மாற முடியுமா?

வான்கோழி எல்லாம் மயிலாக முடியும.

தங்கம் தங்கம்தான், குஷ்பூ குஷ்பூதான்

கொசுறு

குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

இல்லை நடவடிக்கை எடுத்து பாருங்களேன், அப்புறம் 4 காலி நாற்காலிகள் கூட முன்னால் இருக்காது,

தமிழக காங்கிரஸ் தலையில் இருக்கும் கீரிடம் குஷ்பூ, அதனை கழற்றிவிட்டால் வழுக்கை தலையும் அதிலிருக்கும் 4 முடியும் மிக அலங்கோலமாக தெரியும் அய்யா.

இது கூட தெரியாமல் என்ன தலைவரோ???