அதிமுகவினை உடைக்க ஆரிய சதி : கி.வீரமணி

அதிமுகவினை உடைக்க ஆரிய சதி : கி.வீரமணி

மிஸ்டர் வீரமணி, திமுகவினை உடைத்து அதிமுக உருவானதே ஆரிய சதி என உங்களுக்கு தெரியாதா? தெரிந்ததை ஏன் மறைக்கின்றீர்?

அந்த ஆரிய சதி 1972லே நடக்கவில்லையா? அன்று நீங்கள் பிறக்கவில்லையா?

சரி ஆரியசதிப்படி உடைந்த இயக்கம், பின் ஆரிய பழக்கவழக்கங்களில் மூழ்கிய இயக்கம், எம்ஜிஆர் காலத்தில் கடவுள் நம்பிக்கைக்கு வந்த இயக்கம்

ஜெயாகாலத்தில் பழம் மூடபழக்க வழக்கங்களுக்கு, அதாவது உங்கள் பாஷையில் சொல்லபோனால் காட்டுமிராண்டிதனத்திற்கு திரும்பிவிட்ட இயக்கத்தை ஆரியம் ஏன் உடைக்கவேண்டும்?

ஆரியம் உருவாக்கிய இயக்கத்தை ஆரியம் உடைப்பதில் உங்களுக்கு என்னய்யா கவலை?

சரி அதனை ஆரியம் அதனை உடைப்பதில் திராவிட போராளியான நீங்கள் ஏன் அழவேண்டும்?

இது நீங்கள் மகிழும் நேரமல்லவா?

என்னவோ போங்கள் சார், சிரிக்க வேண்டிய இடத்தில் அழுவீர்கள், அழ வேண்டிய இடத்தில் சிரிப்பீர்கள்

பெரியாரின் கொள்கைகளை அல்ல மாறாக அவரின் சொத்துக்களை சுமந்தால் இப்படித்தான்.