விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான்

மலேசிய சுல்தான் பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள் என நீண்ட விடுமுறை.

வருடத்திற்கொருமுறை பிறக்கும் இயேசுகிறிஸ்து விரைவில் பிறக்க இருப்பதால் எங்கும் செல்ல விருப்பமில்லை

விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான்

அதுவும் கொடுவா மீன் என்றொரு வகை இருக்கின்றது, குழம்பு வைத்து, இலையில் ஊற்றிவிட்டால் ஏழு உலகினை மறக்க செய்யும், அரசியல் முதல் உலகம் வரை எல்லாம் எல்லாம் மறக்கும்

அதனை வாயில் வைத்தாலே முப்பது முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதம் நமக்கே கிடைத்திருப்பது போல தோன்றும்

அப்படி ஒரு அலாதி சுவை.

இம்மாதிரி சமையங்களில் குஷ்பூ படம் பார்க்கலாம், அதற்கு முன்பு பழைய படங்கள் பார்க்கலாம் என முடிவாயிற்று

அந்த படத்தில் முத்துராமன் மிக அற்புதமாக நடித்துகொண்டிருந்தார். நவரச நாயகன் எனும் பெயருக்கு அவர் மகா பொருத்தமானவர்

சிவாஜி எனும் சூரியன் முன் அவர் பிரகாசிக்காமல் சென்றிருக்கலாம், ஆனால் மிகசிறந்த நடிகன்.

உறுதியாக சொல்லலாம் சிவாஜிக்கு பின் மிக சிறந்த நடிகன் அவரே..