ஹலோ ஸ்டாலின், கொஞசம் நிதானம்..
அன்று திருப்பூரில் திமுக கூட்டம் நடந்தது
பலர் பேசினர், ஸ்டாலின் பேசும்பொழுது உணர்ச்சியில் கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் இது என முழங்கினார்
இறுதியாக பேசிய கலைஞர், கொடிகாத்த குமரன் திருப்பூரில் பிறந்தவர் அல்ல, அருகிலிருக்கும் சென்னிமலையில் பிறந்தவர் என அழுத்தமாக சொன்னார்
அதாவது ஒரு விஷயத்தை பேசவோ, விவாதிக்கவோ பொது இடத்திற்கு வரும்பொழுது சிறுபிசகும் வரகூடாது என்பது அவர் மறைமுகமாக சொன்னது
ஸ்டாலினை அவர் முழுக்க புரிந்தே இருந்திருக்கின்றார், அவர் தயக்கத்திலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கின்றது.
இந்த கட்சியினை ஒப்படைக்க சரியான நபர் குடும்பத்திலும் இல்லை, கட்சியிலும் இல்லை என்பது அவருக்கு புரிந்திருக்கின்றது
எம்ஜிஆரும், வைகோவும் கொடுத்த பாடத்தில் குடும்பத்தில் ஒருவரை முன்னிறுத்துவது போல நிறுத்தி இறுதிகாலம் வரை இழுத்திருக்கின்றார்..
எப்படி?
பொங்கல் விடுமுறை சர்ச்சையினை முழுக்க படிக்காமல் ஸ்டாலின் போராட அழைப்புவிடுத்து முரசொலியிலும் வந்திருக்கின்றதல்லவா, இது போதாதா?
ஏம்பா, மத்திய அரசு அப்படி ஒன்றை சொல்லவும் இல்லை
ஒருவேளை 1950களிலே அப்படி ஒரு சட்டம் இருந்தால் பெரியாரும், அதன் பின் அப்படி ஒரு சட்டம் இருந்தால் கலைஞரும் விட்டிருப்பார்களா?
இந்த நிதானம் கூட இல்லையா?
ஏதும் சொன்னால் “எம் தளபதி…..” என கிளம்பிவிடுவார்கள்