புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர் : சௌமியா அன்புமணி ..

anb
சௌமியா – அன்புமணி

“புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர்” ‍ அன்புமணி ராமதாஸ் குறித்து மனைவி சவுமியா

அட அவர் அதற்கு மட்டுமா காத்திருப்பார்?, மத்தியில் ஏதும் கூட்டணி குழப்பம் வராதா? 4 எம்பிகொடுத்து பசையான துறை வாங்கமுடியாதா என்று காத்திருப்பார்

தமிழகத்தில் குழப்பம் வந்து பாமக 30 சீட் வாங்காதா? என காத்திருப்பார்

எங்காவது வன்னிய தலித் மோதல் வந்தால் கருத்து சொல்லவும் காத்திருப்பார்.

அப்பா சவால்விட்டதை மறந்து ஏதும் கூட்டணியில் தங்களை சேர்க்கமாட்டார்களா?, அப்பாவிற்கு நினைவு தப்பினால் நாளையே ஒரு கூட்டணியில் சேரமுடியாதா? என்று கூட காத்திருக்கலாம்..

இப்படி ஏகபட்ட விஷயங்களுக்காக காத்திருக்கும் ஒருவர், புடவை கடையில் காத்திருந்தால் பெரிய விஷயமா?