பவுடர் முகத்துக்கு முன்னோடி “நடிகன்” பட மனோரமா ஆச்சி… குஷ்பு எப்படி வசிக்கிறார்?
https://youtu.be/YQL07Sn2iMU
நடிகன் திரைபடம்
குஷ்பூ நடித்த படங்கள் ஒன்றுவிடாமல் பார்க்கவேண்டும் என்பது நமக்கு நாமே வகுத்த விதி
அப்படி பார்க்கும்பொழுதுதான் நடிகன் படமும், அந்த மனோரமா வேடமும் வந்தது
கூடவே அந்த கட்சியியும், அந்த தொலைகாட்சியும் நினைவு வந்து தொலைக்கின்றது
அந்த பவுடர் பூசிய முகத்தை கண்ட பலபேருக்கு இந்த நினைவு வருவதாக சொல்கின்றார்கள்
நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தோன்றும்
ஆனால் மனோரமா மேக்கப் அதனை விட எல்லாம் மிகை என சொல்லிவிடமுடியாது.
முதல் முறையாக குஷ்பூவினை விட மனோரமாவின் மேக் அப் பார்த்து ரசிக்க முடிகின்றது, சிரிப்பும் வருகின்றது
அந்த பவுடர் முகத்துக்கு நிச்சயம் முன்னோடி “நடிகன்” பட மனோரமா ஆச்சி

சென்னை விமான நிலையம் அடிக்கடி இடிகிறது அங்கு விமான பயணமே சவாலான நிலை
இப்பொழுது கப்பல்களும் மோதிகொள்கின்றது என்கின்றார்கள்,
மெரீனாவில் நுழையவே முடியாதாம் 144 தடையாம்.
கோயம்பேடு பஸ்நிலையத்தை மட்டும் தயராக வைத்திருக்கின்றார்கள் போல, எல்லோரையும் தெற்கே விரட்டிவிடுவதற்கு வசதியாக
அந்த ஊர் அடிக்கடி தண்ணீரில் மூழ்குகின்றது அல்லது தண்ணீர் இல்லாமல் அழுகின்றது.
இந்த எண்ணெய் கசடும், கரை ஒதுங்கும் செத்த உயிரினங்களின் துர்நாற்றமும் சென்னையினை ஒரு வழி செய்துவிடும் போல..
ஆக ஒரு மாதிரி “திகிலும் மர்மமும்” ஊராக சென்னை மாறிகொண்டிருக்கின்றது.
நமது கவலை எல்லாம் இந்த ஊரில் குஷ்பூ எப்படி வசிக்கின்றார்? என்பதுதான்,
விரைவில் குஷ்பூவினை அங்கிருந்து காலிசெய்து பாதுகாப்பான நகருக்கு செல்ல ஆலோசனை வழங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.