ரீகன் , புஷ் , டிரம்ப் : ஈரான்
ஆயிரம் சொல்லுங்கள், அமெரிக்காவினை மிக தில்லுடன் எதிர்க்கும் நாடுகள் பட்டியலில் முதலிடம் ஈரானுக்கு
இதோ 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை என்றார் டிரம்ப். இது அமெரிக்க திமிர், எங்களை யார் என்ன கேட்கமுடியும் எனும் இறுமாப்பு அது.
பதிலுக்கு எல்லா நாடுகளும் அழுதும் அலறியும் கொண்டிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல் ஈரானில் இருந்த எல்லா அமெரிக்க நிறுவணங்களையும் அப்படியே சொத்துக்களை போட்டு ஓடுங்கள் என வெளியேற்றுகின்றது ஈரான்
உன் நாட்டில் எங்கள் மக்களுக்கு தடை என்றால், எங்கள் நாட்டில் உங்களை விடுவோமா? என மிக மிக தன்மானத்தோடு எகிறி அடித்திருக்கின்றது ஈரான்
கிட்டதட்ட டிரம்ப் முகத்தில் குத்துவிட்டு அப்படியே காரி துப்பிவிட்ட நிலை
இந்த பெரு அவமானத்தில் சீறிய டிரம்ப் ” நான் ஒபாமா போல அமைதியானவன் இல்லை, நெருப்போடு விளையாடாதீர்கள்” என கத்திகொண்டிருக்கின்றார்
இதற்கு ஈரானியர் பதில்தான் மிக மிக ஆச்சரியமான தைரியம்
“நாங்கள் ரீகன், புஷ் போன்ற பெரும் அறிவும் தைரியமும் அனுபவமும் நிறைந்த தலைவர்களையே சமாளித்தவர்கள், இந்த டிரம்ப் போன்ற அனுபவமில்லாதவர்களை அசால்ட்டாக எதிர்கொள்வோம்”
இதன் மூலம் ஈரானியர்கள் சொன்னது என்ன? டிரம்ப் கிட்டதட்ட ஒரு அரைவேக்காடு, உலகம் புரியாத அரசியல்வாதி, சமாளிப்பது வெகு எளிது
டிரம்பும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கின்றார், உலகின் மொத்த பகையினையும் சம்பாதித்து அடிபட்டே சாகவேண்டும் என சபதமெடுத்தவர் போல தெரிகின்றது
சீனாவினை அவர் மிரட்ட, அதுவோ தன் படைகலன்களை காட்டி உலகினை மிரட்டிகொண்டிருக்கின்றது, ரஷ்யா எப்பொழுதும் தயார்
இதோ ஈரானும் வந்து பார் என்கின்றது
ஆனாலும் ஈரானியர்களின் தைரியம் அபாரமானது, அமெரிக்க ரீகனை அலறவிட்டவர்கள், அதன் பின் சதாமாலும் அவர்களை அசைக்கமுடியவில்லை
இரு புஷ்களாலும் ஈரானை தொட்டு கூட பார்க்கமுடியவில்லை
இப்பொழுது டிரம்ப் என்ன செய்வார் என தெரியாது, ஆனால் வெகு சுலபத்தில் ஈரான் பணியாது, வியட்நாமில் அமெரிக்கா பட்ட அடி திரும்பலாம்
டிரம்பிற்கு உலகில் முதல் அடியினை செவிட்டில் கொடுத்திருக்கும் ஈரானை உலகம் மிரட்சியாக பார்த்துகொண்டிருக்கின்றது
டிரம்ப் கண்களை துடைத்து கொண்டிருக்கின்றார்.