தமிழக அரசு இன்னும் திறக்காத கட்டங்களை, பாமக திறக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

தமிழக அரசு இன்னும் திறக்காத கட்டங்களை, பாமக திறக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

அட தாராளமாக திறங்கள் அய்யா, சரி அந்த பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்?

உதாரணத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்புவிழா காணாமல் இருக்கின்றது, நமது அய்யா திறந்துவிடுவார் ஆனால் பணியார்களை நியமிப்பது, சம்பளம் கொடுப்பது எல்லாம் இவர் செய்வாரா? முடியுமா?

அப்படி எல்லா செலவுகளையும் பாமக ஏற்கும் என சொல்லிவிட்டு இவர் அந்த கட்டங்களை திறக்க சென்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் செய்யமாட்டார் அல்லவா?

சரி இப்படி அறிவிக்காமல் இவர் அடவாடியாக திறந்தால் என்னாகும்?

ஆளில்லாமல் அதன் பின் அது தானாக பூட்டபடும்

அதனைத்தானே அரசு செய்திருக்கின்றது, பின் இவர் ஏன் செய்யவேண்டும்?

அப்படி ஏதாவது அரசினை மீறி செய்யவேண்டுமென்றால் அரசின் எதிர்ப்பினை மீறி இவர் மதுகடைகளை பூட்டினால் என்ன?