உலகம் அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது!!!
சசிகலாவும் பன்னீரும் மல்லுகட்டிகொண்டிருப்பதில் நமக்குத்தான் பிரச்சினை உலகிற்கு என்ன?
அது அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது
இன்றைய உலகம் என்றால் அது அமெரிக்கா, அமெரிக்கா என்றால் டிரம்ப்.
என்ன செய்கின்றார்? உள்நாட்டில் அவர் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம். பல நாட்டு மக்களை அமெரிக்க வாசல்படி மிதிக்க கூடாது என்றார். உள்நாட்டில் வந்துவிட்டவர்களையும் கிரீன்கார்டுக்கு ரெட் கார்டு காட்டிகொண்டிருக்கின்றார்
உள்நாட்டில் எதுவும் செய்யட்டும், அவர் நாடு அவர் அதிகாரம்.
ஆனால் உலக நாடுகளிடமெல்லாம் சென்று அப்படி அதிகாரம் செய்தால் விடுவார்களா?
சீனாவிடம் வம்பிழுத்து, அது பெரும் ராணுவபயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றது, தன் மொத்த படைபலத்தினையும் சோதிக்க கிளம்பிவிட்டது
சீனாவின் நவீன ராணுவம் கொஞ்ச காலம்தான் அமைக்கபடிருக்கின்றது, ஒரு உருப்படியான யுத்தத்தைய்ம் அது சந்தித்ததில்லை
முன்பொருமுறை பலவீனமான இந்தியாவுடம் மட்டும் அதன் வரலாற்றில் மோதியிருக்கின்றது, அதன் பின் அது எந்த யுத்தத்திலும் பங்கேற்றதில்லை
ரஷ்யாவிடம் பயந்து ஓடியது, இன்றும் தைவானை மிரட்டுமே ஒழிய படையெடுத்ததில்லை, ஜப்பானிடமும் மோதவில்லை
ஒரு நாடு கொஞ்சமாவது ராஜதந்திரத்தில் இறங்கும் , சுற்றிலும் பகை நாடுகளை உருவாக்காது, உதாரணம் இலங்கையினை இந்தியா கையாண்டுகொண்டிருப்பது
ஆனால் சீனா அப்படி அல்ல, இந்தியா, வியட்நாம், தைவான், ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா என சுற்றி பகையினை வளர்த்திருக்கும் நாடு சைனா
ஆக அது யுத்தத்தில் இறங்குமா? இறங்கினாலும் தாங்குமா என்பது கேள்விகுறி.
யுத்த அனுபவம் அதற்கு இல்லை, கடற்படை அனுபவம் இன்றும் இல்லை, கடல் பலமும் பெரிதாக இல்லை
இதனை எல்லாம் கணித்துத்தான் டிரம்ப் மிரட்ட தொடங்கிவிட்டார். எனினும் ஏவுகனை பலம் சீனாவிற்கு உண்டு, அந்த பலத்தில் ஆட கிளம்பியிருக்கலாம்
சீனாவினை கூட அமெரிக்கா சமாளிக்கலாம்
ஆனால் ரஷ்யா?
அதன் சுற்றுபுற நாடுகளை எல்லாம் அமெரிக்கா வளைக்க நினைத்து, கொஞ்ச காலம் ஓய்வில் இருந்தது. டிரம்ப் அதற்க் அழுத்தம் கொடுக்க சுதாரித்துவிட்டார் புட்டீன்
அவர் தன் ராணுவத்தினை முழு விழிப்புக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார், பயிற்சியும் ஒத்திகையும் நடக்கின்றது
அதாவது எந்நேரத்திலும் யுத்ததிற்கு தயார் எனும் அறிவிப்பு அது
சீனாவும், ரஷ்யாவும் எந்த சூழ்நிலையும் சந்திக்க தயார் என அறிவித்துகொண்டிருக்கின்றது, நிலமை மோசமாகின்றது
உலகம் இப்படி கிளம்ப, டிரம்ப் என்ன செய்கின்றார்?
இன்னும் கூட 4 எதிரிகளை சேர்த்து மொத்தமாக அடிவாங்கலாம் என திட்டமிட்டுகொண்டிருன்றார்ரோ என்னமோ? அடுத்தால் யாரிடம் வம்பிழுக்க போகின்றாரோ தெரியாது, ஆனால் நிச்சயம் இழுப்பார்