சு.சுவாமி ராஜதந்திரத்துடன் பேசுவதாக நினைப்பா?

சசிகலாவினை மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இடைதேர்தலில் மக்கள் தோற்கடிகட்டும் : சுப்பிரமணியன் சுவாமி

மிஸ்டர் சுவாமி நீங்கள் மிகுந்த ராஜதந்திரத்துடன் பேசுவதாக நினைப்பா?

சசிகலா எம் ஏல் ஏ ஆவது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்கள் இடைதேர்தலில் தோற்கடிக்கட்டும் என்றால் சரி

ஆனால் சசிகலா முதல்வராவதை மொத்த தமிழகத்திற்கும் பிடிக்கவில்லை என்பதாலும், 130 எம் எல் ஏக்களை அவர் மிரட்டி வைத்து இருப்பதாலும், இன்னொரு பினாமி மூலம் தமிழகத்தை ஆள வாய்ப்ப்பு இருப்பதாலும் தமிழகத்திற்கு மறுதேர்தலே சரி

ஒரு தொகுதியில் சசிகலாவினை தோற்கடித்தாலும் 131 தொகுதி எம் ஏல் ஏக்களை மிரட்டி அவர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சசிகலாவினை மக்கள் எப்படி தோற்கடிக்க முடியும் மிஸ்டர் சு….

ஆக இந்த இடைதேர்தலில் சசிகலாவினை தோற்கடிக்கட்டும் என்ற அரசியல் கோரிக்கை எல்லாம் வேண்டாம், தமிழகத்தில தேர்தல் நடக்கும் கோரிக்கை வையுங்கள் அது நியாயம்

அப்படி தேர்தல் நடந்தால் சுத்தமாக அழிந்துவிடுவோம் என சசிகலாவிற்கு தெரியும், அது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்