இத்தோடு அந்த சனியன் ஒழியட்டும்…

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அக்கட்சியினரால் மிகுந்த அர்த்தத்துடன் கொண்டாடபடுகின்றது,

இப்படித்தான் வேட்டி உருவி, அடித்து பிடித்து, மிரட்டி, கடத்தி, வசனம் எல்லாம் பேசி சிறைக்கெல்லாம் சென்று கொண்டாடபட வேண்டும்.

மிகுந்த கலவரத்திற்கிடையிலும், ஒரு அச்சமான சூழலிலும் கொண்டாடினால்தான் அவருக்கு பெருமை,

அதுவும் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் ஊழல்பணம் கோடிகளில் கொட்டும் நேரம்,

அதுவும் முன்னாள் இன்னாள் பொதுசெயலாளர் எல்லாம் பெரும் மோசடி பேர்வழிகள் என நீதிமன்றமே உள்ளே தள்ளியிருக்கும் நேரம்

இதனை விட மிக சிறப்பாக‌ எப்படி அவரின் நூற்றாண்டு காலங்களை கொண்டாடமுடியும்?

இத்தோடு அந்த சனியன் ஒழியட்டும்