ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ….

ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ஏதோ முணுமுணுக்கின்றா, அடிமைகள் எல்லாம் ஏதோ கோயில் நடை திறந்தது போல பரவசநிலையில் கை கூப்பி நிற்கின்றார்கள்

அடுத்து கூவத்தூரில் சவால் விடுகின்றார் சசிகலா, அங்கும் அடிமைகள் ஆர்பரிக்கின்றார்கள்

இந்த காட்சியினை காட்டிவிட்டு சின்னம்மாவின் கர்ஜனைக்கு ஆளுநர் மாளிகை கதவு திறந்தது, சின்ன அம்மா ஆசிபெற்ற பழனிச்சாமி முதல்வரானால் என மகிழ்வோடு சொல்லிவிட்டு செய்திகளை முடிக்கின்றது ஜெயா டிவி

அவர்களுக்கொரு தனி உலகம்…


எடப்பாடி பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து

என்னது மோடி வாழ்த்திவிட்டாரா?

என்ன சோனமுத்தா போச்சா? இனி அவ்வளவுதான்


ஜெயா அமர்த்திய பன்னீரை சசிகலா எழும்ப சொன்னபொழுது ஒரு சண்டை உருவாகி ஓடிகொண்டிருக்கின்றது

சசிகலா அமர்த்திய எடப்பாடியினை திவாகரனோ, தினகரனோ எழும்ப சொல்லும் பொழுது அடுத்த ரவுண்ட் சண்டை உருவாகலாம்

அதிமுக சக்கரம் அப்படித்தான் சுழலும், பார்க்கலாம்..