எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜயசாந்தி வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி வாழ்த்து

அம்மணி உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இந்த பழனிச்சாமி அரசு போல தெலுங்கானாவில் ஒன்று அமைய சம்பதிப்பீர்களா?

அமைய விடுவீர்களா?

தமிழ்நாட்டில் அமைந்தால் வாழ்த்துவீர்களா? அப்படி நல்ல அரசு என்றால் தாரளமாக அழைத்து அங்கே அமைத்துகொள்கின்றீர்களா?

சசிகலா குடும்பத்தை தெலுங்கானாவிற்கு தத்தெடுத்துகொள்வீர்களா?

தமிழக மக்கள் உங்களுக்கு மிகுந்த நன்றிகடன் காட்டுவார்கள், தாரளமாக அங்கே இவர்களை அனுப்புவார்கள்

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?

எப்படியோ, தமிழக ரிசார்ட்டுகள் விழித்துகொண்ட நிலையில், ஐதராபாத்தில் ரிசார்ட் காலியாக இருப்பதாக சொல்லாமல் சொல்கின்றார் விஜயசாந்தி 🙂


கொசுறு

இந்தியன் பிரிமீயர் லீக் ஏலம் : பல வீரர்கள் விலை போகவில்லை

அதிகம் விலை போக அவர்கள் என்ன அதிமுக எம் எல் ஏக்களா?

விரைவில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் தேர்வு தமிழக சட்டமன்ற தேர்தலாக இருக்கலாம் 🙂