குறு குறு செய்திகள் ….

Image may contain: 1 person, close-up

என்னை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டால் , குஷ்பூ கோயில் புரவலர், பூசாரி, பக்தன், குஷ்பூவின் அதிரசிகன், தலமை ரசிகன் என்பன போன்ற பதில்கள் மட்டும் வரும் என்பதால் ….

அந்த கேள்வியினை கேட்காமல் விட்டுவிடுகின்றேன்..


அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார்: டிடிவி தினகரன்

மன்னார்குடி குடும்பம் மட்டும் அதிமுக வாழ்ந்துவிட வேண்டும் என்றா ஆசைபடுகின்றது

மன்னார்குடி குடும்பத்தை விட மோசமாகவா பன்னீர் அதிமுகவினை அழித்துவிட போகின்றார்?


நெடுவாசல் போராட்டம் பற்றி பேச முதல்வர் பழனிச்சாமிக்கு என்ன அச்சம்? : சீமான் சீற்றம்

அதாவது அங்கிள், முன்பு ஜெயலலிதாவிற்கு நீங்கள் எப்படி பம்மினீர்களோ அப்படி பழனிச்சாமி சசிகலாவிற்கும், மோடிக்கும் பம்மி கிடக்கின்றார்

ஒரு அடிமையின் உணர்வு, உங்களை போன்ற முன்னாள் அடிமைக்கு புரியாவிட்டால் எப்படி?


மக்களின் விருப்பத்துக்கு மாறாக மத்திய அரசு செயல்படாது: தமிழிசை

எப்படி நம்ப முடியும்?

அப்படி மக்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் கட்சி என்றால் எப்பொழுதோ இவரையும், எச்.ராசாவினையும் தூக்கி வீசியிருக்காதா?

இன்னும் விட்டுவைத்திருக்குமா?

ஆக அந்த கட்சி எப்பொழுதும் தமிழக மக்களின் எதிராக செயல்படும்பொழுது, அதன் ஆட்சி மட்டும் எப்படி தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கமுடியும்?


சென்னையில் 34 வயது கள்ளக்காதலனுக்கு பெண் பார்த்ததால் 60 வயதான கள்ளக்காதலி அதிர்ச்சி; இறுதியில் இருவரும் தற்கொலை

இப்படியும் பெண்கள் முன்னேறி இருக்கின்றார்கள், அரபு நாட்டு ஷேக்குகளுக்கு நிகராக தமிழக பெண்களும் வெற்றி நடை போட தொடங்கியாயிற்று

“ஆணுக்கு பெண்ணிங்கே இளப்பில்லை காணீர்”


சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளராக சரத்குமார் நியமனம்

ஒரே ஒரு தொண்டர் இருக்கும் கட்சியில் அவர்தான் பொதுசெயலாளர் ஆகமுடியும்..இதில் என்ன பிரமாதம்?


இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக 386 பேர் பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது, அதன் வரலாற்றிலே இதுதான் அதிகம் பேர் பரிந்துரைக்கபட்ட எண்ணிக்கை

ஒருவேளை ஜெயா, சசிகலா பெயரினையும் அதிமுகவினர் சேர்த்திருப்பார்களோ?

உலக அமைதிக்காகவே சசிகலா சிறைவீற்றிருக்கின்றார் என கிளம்பினாலும் கிளம்புவார்கள்..

பெயர் பட்டியல் வெளிவந்தால்தான் தெரியும்..


விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் மத்திய அரசு தவறான பாதையில் செல்கிறது: உச்ச நீதிமன்றம்

அந்த ஒரு விவகாரத்தில் மட்டுமா மத்திய அரசு தவறான பாதையில் செல்கின்றது?

அது எல்லா விவகாரத்திலும் தவறாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது.