கூத்தாடி உலகத்தில் இதில் என்ன அதிசயம்?

“அப்பா, வாங்க ஜெயா டிவில உங்களுக்கு பிடிச்ச சின்னம்மா நியூஸ் சொல்றாங்க, சீக்கிரம் வாங்க சிரிக்கலாம்..”

இப்படி அழைக்கின்றாள் மகள்

சிறு வயதில் இந்த பெண் குழந்தைகள் எவ்வளவு அழகாக தந்தையினை புரிந்துகொள்கின்றன,

பெரியவளான பின்னும் இப்படியே புரிந்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும்..


Image may contain: 1 person, smiling, sunglasses and close-up

தனுஷும் , அவர் நண்பர்களும் , அந்த பாடகியும் ஏதோ விவேகானந்தரின் வாரிசுகள் போலவும், பெரும் பாரம்பரிய கலாச்சாரங்ளை கொண்டவர்கள் போலவும் ,

சில செய்திகளையும் வீடியோக்களை கண்டவர்கள் ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றார்கள்

கூத்தாடி உலகத்தில் இதில் என்ன அதிசயம்? தலைவன் எம்.ஆர் ராதா அழகாக சொல்வார்

“டேய்.கூத்தாடி பய உலகம் அப்படித்தான் இருக்கும். நீ ஏன் அதுல போய் மேதைகளும், சிந்தனையாளர்களும், வழிகாட்டிகளும் இருக்கின்றார்கள் என தேடலாம்?

நல்லவர்கள், பொதுநலவாதிகள், கற்றவர்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றார்கள், அங்கே போய் தேடு

அவங்க எல்லாம் இந்தமாதிரி இடத்துக்கு வரமாட்டங்க, கவுரவமானவர்கள், சுய அறிவு உள்ளவர்கள், கண்ணியவான்கள். அவங்க இருக்கிற இடம் வேற அங்க போய் தேடு

இந்த கூத்தாடி உலகத்தில..அதுவும் நாங்கல்லாம் நாடகம் போட்ட காலத்துல சீ சீ வேணாம் , பொது இடத்தில பேசினா நல்லாருக்காது

நல்லவங்கள, சிந்தனையாளர்கள அங்க தேடாத, அங்க எல்லாம் பஞ்சமா அயோக்கிய பயலுக, அவனுக உலகம் வேற‌

பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு, அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான், அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காத, அது பெரும் அசிங்கம், அவன் விதி அப்படி”

இந்த கேமரா, இணையம், டிவிட்டர், காலங்களில் மட்டும் எம்.ஆர் ராதா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்

ஆனால் இல்லை, இந்த நடிகர்கள் கும்மாளத்தை அவரின் வரிகளிலே புறந்தள்ளிவிடலாம்

அப்படி விட்டுவிடலாம் என்றால் சு.சாமி இந்த விவகாரதினை ஏன் கையில் எடுக்கின்றார் என்பதில்தான் சந்தேகம் வலுக்கின்றது

ஏதும் தமிழக விஷயங்களில் இருந்து தமிழ்க மக்களின் கவனத்தை மாற்ற வந்துவிட்டாரோ?

உலக வங்கிகளில் எல்லாம் ஊடுருவி, எங்கெல்லாம் சென்று தகவல்களை திரட்டி எல்லோரையும் மிரட்டும் சு.சாமி இந்த சுசித்திரா, தனுஷ் என திசைமாறும் மர்மம் என்ன?

சாமி கை சும்மா டிவிட்டரை தட்டாது, ஏதும் திட்டம் இருக்கலாம்

நடிகர், நடிகைகளை விடுங்கள். பாடகிகள் உலகிற்கு இது புதிது

எத்தனை பெரும் பாடகிகளை தமிழகம் கண்டிருக்கின்றது, தழைய பட்டு உடுத்தி, தலையில் மல்லிகையுடன் சால்வை போர்த்தி அவர்கள் வரும் அழகினை பார்க்க அப்படியே வணங்க தோன்றும்.

அவர்கள் பாடும்பொழுது சாட்சாத் சரஸ்வதியே வீணையின்றி பாடுவது போல இருக்கும்..

எம்.எஸ் சுப்புலட்சுமி, எம்.எல் வசந்தகுமாரி என எத்தனை அடையாளங்கள் அப்படி உண்டு

ஏதோ ஒரு மேடையில் தனக்கொரு அவமானம் நிகழ்ந்ததாக கருதி, இனி அந்த பாடகரோடு பாடவே மாட்டேன் என சவால்விட்டவர் சுசீலா

என் குரல்தானே வேண்டும், நான் வெண்ணாடை உடுத்தி அபகோலத்தில் இருந்தால் உலகிற்கென்ன என இன்றுவரை நிற்பவர் ஜாணகி

இப்படி எத்தனை அடையாளங்கள்?

அப்படி ஒரு பாடகிகள் உலகமும் இந்த தமிழகத்தில்தான் இருந்தது.

இன்றுவரும் செய்திகளை பார்க்கும்பொழுது அக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன‌

அப்படி சீதைகளின் கையில் இருந்த பாட்டு உலகம் இன்று சூர்ப்பநகைகளிடம் சிக்கிவிட்டது

போகட்டும்

சரி சு.சாமி ஏன் தனுஷினை இழுக்கின்றார்??? ரஜினிக்கு ஏதும் செக் வைக்கின்றாரோ?

நிச்சயம் சு.சாமி இந்த சர்ச்சைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை, ஒருவேளை போலி கணக்காக இருக்கலாம். அப்படி இருந்தால் சாமிக்கு நல்லது

ஆனாலும் “டேய் கூத்தாடி உலகம் அப்படிதாண்டா, இதுல என்னடா ஆச்சரியம்” என அன்றே சொன்ன எம்.ஆர் ராதா ரியலி கிரேட்…

சல்யூட் தலைவா..