திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் அழிச்சாட்டியம் ஒழியட்டும்
முன்பெல்லாம் திரையுலகிற்கு பிரச்சினை என்றால் உடனே முதல்வர்களிடம் வந்து கண்ணை கசக்குவார்கள்
திரைப்படத்திலிருந்து வந்திருக்கும் முதல்வர்களும் உடனே இருக்கும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வரிந்துகட்டி களத்தில் இறங்குவார்கள்
எந்த முதல்வர் வந்தாலும் அவர்கள் கொண்டாடுவார்கள், எந்த சினிமா விழா என்றாலும் முதல்வர்கள் இளித்துகொண்டு அமர்ந்திருப்பார்கள்
அண்ணா காலத்தில் தொடங்கிய இம்சை இது
எம்ஜிஆரும் , கலைஞரும் இதில் உச்சம் தொட்டவர்கள். எல்லா நடிகர் திருமணமும் அவர்கள் தலமையில் நடக்கும், பின் விவாகரத்து சிக்கல்கள் கூட முதல்வர் பஞ்சாயத்தில் நடக்கும்
ஜெயா மிரட்டலிலே கொண்டு சென்றார்
கலைஞர் நடிகர் நடிகைகளை தேடி சென்று வாழ்த்திய காலமும் உண்டு, அவர் அப்படித்தான் 4 பேருக்கு மக்கள் அபிமானம் உண்டென்றால் அது யாராக இருந்தாலும் விட மாட்டார்.
இப்பொழுது காட்சிகள் மாறிவிட்டன, திரையுலகம் ஒரு வித உச்ச பரபரப்பில் இருக்கின்றது, அரசிடம் வரவில்லை
அரசு அதன் போக்கில் இருக்கின்றது
திரையுலகை சாராத முதல்வர் பழனிச்சாமி காலத்தில் இந்த அதிசயம் நடந்துகொண்டிருக்கின்றது
இதே பழைய காலம் என்றால் கமிஷனரிடம் புகார், திரைமறைவு வேலைகள் என என்னவெல்லாமோ நடக்கும்
இதோ திரையுலக சண்டையினை நீங்களே போட்டுகொள்ளுங்கள் என பழனிச்சாமி அரசு அமைதிகாக்கின்றது
ஆயிரம் விமர்சனங்கள் இந்த அரசு மீது இருந்தாலும், இப்படி திரையுலகத்தை தனியே அழவிட்டிருக்கும் விஷயம் வாழ்த்துகுரியது
இனி திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் அழிச்சாட்டியம் ஒழியட்டும்
பழனிச்சாமி அரசு அதற்கு தொடக்கபுள்ளி வைத்திருப்பது நன்றாக தெரிகின்றது
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது சத்தியமாக இதுதான்