ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 02
“தெளிவாய தேச விளக்கொளியை காணில்விளக்காய வீடதுவே யாம்” இப்பாடல் “தெளிவாய தேச விளக்கு ஒளியை காணில் விளக்காய வீட்துவே ஆம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது இந்த உடலாகிய வீட்டில் சிவனின் ஒளியினை கண்டால் அந்த பரமனின் ஒளியினை கண்டால் அண்டத்தில் உள்ளவற்றையெல்லாம் காணலாம் என்பது பொருள் இது கொஞ்சம் சூட்சுமமான விஷயம் அண்டதில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள் ரிஷிகள், அவ்வகையில் இந்த உடலே அண்டத்தின் எல்லா அம்சமும் அடங்கிய கூடு இங்கு அதாவது […]