பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சுப்பிரமணிய புஜங்கம் : 06 / 06

(இருபத்தியாராவது முதல் முப்பத்து மூன்றாம் (இறுதி) ஸ்லோகம் வரை) கந்த சஷ்டி நாட்கள் என்பவை சூரசம்ஹாரத்தோடு மட்டும் முடிவதல்ல, ஏழாம் நாள் மிக முக்கியமானது. அன்றுதான் திருகல்யாணமெல்லாம் நடக்கும், முருகப்பெருமான் பெரும் அருள் புரிவார். இன்று தான் அவர் வரமருளும் நாள். திருக்கல்யாணம் என்பது லவுகீக சிந்தனைபடி மணவாழ்வு என்றாலும், ஆன்மீக போதனைப்படி முருகப்பெருமான் எனும் பரமாத்வோடு மானிட ஜீவாத்மா கலந்து நிற்கும் தருணம் அதாவது பரம்பொருள் மானிட ஆத்மா மேல் எவ்வளவு அன்புகொண்டு அதனை தன்னொடு […]

சுப்பிரமணிய புஜங்கம் : 05 / 06

(இருபதாம் முதல் இருபத்தைந்தாம் ஸ்லோகம் முடிய) இதுவரை முருகனின் ஆலயம், முருகப்பெருமானின் அழகான கோலம் என உருகிப் பாடிய ஆதிசங்கரப் பெருமான் இப்போது மனக்கவலையால் ஏற்படும் நோய், பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் நோய், சூழலால் ஏற்படும் நோய் என மூவகை நோய்களையும் முருகப்பெருமான்  தீர்த்து வைப்பான், அவன் ஒருவனாலேயே பூர்வ ஜென்ம வினைகளையும் விதியினையும் மாற்றிவைக்க முடியும் என உருகிப் பாடி நிற்கின்றார் சங்கரர். இது அவருக்காக மட்டும் பாடிய பாடல் அல்ல, நோயுற்றிருக்கும் எல்லா […]

சுப்பிரமணிய புஜங்கம் : 04 / 06

(பதினான்காம் முதல் பத்தொன்பதாம் ஸ்லோகம் முடிய) பதினான்காம் ஸ்லோகம் “ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானிஸுதாஸ்யந்தி பிம்பா தரணீச ஸூனோதவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி” முதல்வரி “ஸ்புரன் மந்த ஹாஸ ஸ ஹம்ஸானி சஞ்சத்” அதாவது என்றால் மின்னுதல் / ஜொலித்தல் என பொருள், சுப்பபுரமணி என முருகனுக்கு சமஸ்கிருத பெயர் வந்தது இப்படித்தான், மணிபோல மின்னுபவன் என பொருள் மந்த ஹாஸ என்றால் புன்முறுவல், ஸ என்றால் உடன், ஹம்ஸா என்றால் அன்னம், சஞ்சல் […]

சுப்பிரமணிய புஜங்கம் : 03 / 06

(எட்டு முதல் பதிமூன்று வரையான ஸ்லோகங்கள்) சுப்பிரமணிய புஜங்கத்தில் மிக அழகான அணுகுமுறையினை நேரடியாகவும் சூசகமாகவும் போதிக்கின்றார் ஆதிசங்கரர். முதலில் திருச்செந்தூரின் கடற்கரை, கந்தமலை எனச் சொல்லும் சங்கரர் பின் முருகப்பெருமானின் அழகிய‌ தோற்றத்தை 8ம் ஸ்லோகத்தில் இருந்து விளக்கத் தொடங்குகின்றார் அதன் அர்த்தம் காடு, மலை,கடற்கரை என எங்கெல்லாமோ ஓடி இறைவனை தேடுவவோர் தங்கள் மனக்கண்ணில் இறைவனை காணும்படி தியானிக்க வேண்டும் என்பது இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றார் அப்படியே மனதிலும் குடியிருக்கின்றார், காடு மலை […]

சுப்பிரமணிய புஜங்கம் : 02 / 06

(இரண்டாம் முதல் ஏழாம் ஸ்லோகம் வரை) இரண்டாம் ஸ்லோகம் “ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மேமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்” இந்த பாடல் வரியினை பிரித்து பொருளை காணலாம். “ந ஜானாமி சப்தம்”, பகவானே எனக்கு ஒரு வார்த்தை கூட பதமாக நயமாக‌ பேச தெரியாது, “ந ஜானாமி சார்த்தம்” பொருளின் அர்த்தம் புரியாது, “ந ஜானாமி பத்யம்”, இலக்கண மரபுபடி யாப்பும் அறியேன், […]

சுப்பிரமணிய புஜங்கம் : 01 / 06

முன்னுரை & கடவுள் வாழ்த்து ஸ்லோகம் 01 முருகப்பெருமான்  பக்தியில் முக்கியமான வழிபாட்டு பாடல் இந்த சுப்பிரமணிய புஜங்கம். இது மகா அவதாரமான ஆதிசங்கரப் பெருமானால் அருளப்பட்டது. இதற்கு ஒரு பின்னணி வரலாறும் உண்டு. அவதாரங்களும் சோதனையில் சிக்கும், அதற்கு காரணம் அந்த சோதனையால் அவர்கள் பெரும் தத்துவத்தை உலகுக்கு கொடுக்க வேண்டும், பெரும் போதனையினை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதே எல்லா அவதாரங்களுக்கும் எல்லா தேர்ந்தெடுக்கபட்ட ஆத்மாக்களுக்கும், புண்ணிய ஆத்மாக்களுக்கும் பெரும் பெரும் சோதனை வரும், அதெல்லாம் […]

ஸ்ரீசைலம் ஆலயம் – ஜோதிர்லிங்கமும் சக்திபீடமும்

ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுனர் பாரதத்தின் எல்லா பாகங்களிலும் பிரசித்தியான சிவாலயங்கள் உண்டு, அவ்வகையில் தக்காணத்தில் பிராதனமான ஆலயம் ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஆலயம் ஆந்திர மாகாணத்தில் அமைந்துள்ள அந்த ஆலயம் தமிழக சிதம்பரம் திருவண்ணாமலை போல் தனித்துவமானது, மகா பிர்சித்தியானது. ஸ்ரீசைலம் 12 ஜோதிர்லிங்கத்தில் முக்கியமானது மட்டுமல்ல, அன்னை சக்திக்குரிய சக்திபீடங்களில் அது கழுத்துபகுதி விழுந்த இடத்துக்கானது, அவ்வகையில் அது பெரிய சக்திபீடம் ஜோதிலிங்கமும் சக்திபீடமும் இணைந்த மூன்றாம் அதுதான். காசியும் ஜார்கன்ட் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 04 / 08 : திருகாராயில்

ஸ்ரீ கைலாச நாயகி சமேத கண்ணாயிரம் நாதர் – குக்குட நடனம் திருவாரூருக்கு தெற்கே சுமார் 15 கல் தொலைவில் உள்ளது அந்த திருகாராயில் ஆலயம், அதுதான் சப்த விடங்கர் ஆலயத்தின் நான்காம் ஆலயம். இந்த தலத்தின் சிவபெருமான் கண்ணாயிரம் நாதர் என அழைக்கபடுகின்றார், அன்னையின் பெயர் கைலாச நாயகி காரை மரங்களுடன் அகில் மரங்கள் நிறைந்திருந்த இடம் காரை அகில் என அழைக்கபட்டு காராயில், காரோயில் என மாறி, திருகாராயில் என்றாயிற்று இதனை திருகாரவாசல் என்றும் […]

வராக துவாதசி / வராஹ ஜயந்தி

இன்று இந்துக்களின் வராக துவாதசி, இந்நாள் வராஹ அவதாரத்துக்குரியது. இந்துக்களின் 12ம் புராணம் வராஹ புராணம். அது இந்த அவதாரத்தின் பெரும் சிறப்பினைச் சொல்கின்றது. மூன்றாம் அவதாரமாக வந்த அந்த அவதாரமே பூமியினை மீட்டெடுத்தது. இரணியாக்ஷன் எனும் அரக்கனை அழித்து பகவான் பூமியினை மீட்டெடுத்த புராணம் அது. அர்ஜூனக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல் போல பூமாதேவிக்கும் வராக கோல பகவானுக்கும் நடந்த உரையாடலும் தத்வார்த்தமானது ஆழமான ஞானமானது. இன்று அந்த அவதாரத்தை இந்துக்கள் நோன்பிருந்து வழிபடுவார்கள். இந்துக்களின் […]

நாச்சியார் திருமொழி : 51

அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications