பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 05

“பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகிவிண்ணாகி நிற்கும் வியப்பு” இக்குறள் “பெண் ஆண் அலி என்போர் அன்றி இலாதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு” என பொருள் பட பிரியும். அந்த பரம்பொருள் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் அல்லாத திருநங்கை (அலியும்) அல்ல அது பிரபஞ்சம் முழுக்க பரந்து வியாபித்திருக்கும் பெரும் சக்தி என்பது பொருள் ஆம், பரம்பொருள் எனும் தெய்வ சக்தி உருவமில்லாதது ஆண் பெண் அலிதன்மை என எல்லாவற்றையும் தாண்டிய ஒரு சக்தி […]

செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை

தமிழக மதுகொடுமை நிலை முன் எப்பொழுதும் இல்லா வகையில் உச்சத்தை எட்டியிருக்கின்றது, பெண்களுக்கான தனி பார் என அதிரவைத்த தமிழகம் இப்பொழுது பள்ளி மாணவிகள் குடித்து வீழும் காட்சிகளை காண தொடங்கியிருக்கின்றது இது மாபெரும் வீழ்ச்சி, ஒரு உன்னத நாகரீக சமூகம் வீழ்ந்து சரிந்திருப்பதின் கண்ணீர் காட்சி இங்கு எல்லாமே மாறிவிட்டது, வந்தவழி தெரியாமலும் செல்லுமிடம் தெரியாமலும் நடுகாட்டில் திகைத்து நின்று மரங்களில் முட்டிமோதி பள்ளத்தில் விழும் அவலம் தொடர்கின்றது மது என்பது ஒவ்வொரு நாட்டிலும் அதன் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 04″

“தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது” இக்குறள் “தனக்கோர் உருவில்லை தான் எங்குமாகி மனத்தகமாய் நிற்கும் அது” என பிரிந்து பொருள் தரும்அதாவது முக்திநிலை எனும் பெருநிலைக்கு ஒரு உருவமோ வடிவமோ இல்லை அது எங்கும் நிறைந்திருப்பது போல மனதினுள்ளும் நிற்கின்றது, மனதால் அந்த முக்தியினை உணர்ந்து முழுமையான நிறைவை உணரலாம் என்பது குறளின் பொருள்இந்த அதிகாரம் உயர்ந்த ஞானநிலையினை போதிக்கின்றதுமுக்தி என்பது எங்கோ இருப்ப்பது அல்ல, அதற்கு உருவமும் வடிவமும் இடமும் இருப்பதல்ல, […]

நீதிநெறி விளக்கம் : 82

நீதிநெறி விளக்கம் : 82 “கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும்பொற்றொடி நல்லார் நனிநல்லர் – மற்றுத்தம்கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர்யாவர்க்குங் கேடுசூ ழார்” கற்பில்லாத குலமகளிரை விட தன் உடலையும் அதன் இன்பத்தையும் விற்று வாழும் விலைமகளிர் மிகவும் உயர்ந்தவர்கள், கற்பில்லா குலமகள் தன் கணவன் சுற்றம் என எல்லோரையும் ஏமாற்றுகின்றாள் இன்னும் அவளால் பெரும் அவமானமும் வரலாம். ஆனால் விலைமகள் உடலை விற்பவளாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மையாக இருக்கின்றாள் அதனால் அவளே சிறந்தவள் என்பது பொருள் […]

அந்த இரு கோபுரங்கள்…..

தன் ஆதாயத்துக்காக யாரையோ தூண்டிவிட்டு அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து பின் வாங்கி கட்டிகொள்வது அமெரிக்காவின் தலையெழுத்து, ஒரு எதிரியினை ஒழிக்க ஒருவனை உருவாக்கி பின் அவனோடு மல்லுகட்டி வாங்கி தீர்ப்பார்கள் இது முன்பு சோவியத்துக்கு எதிராக ஹிட்லரையும் ஜப்பானையும் வளர்த்து வாங்கி கட்டியது, ஈரானுக்கு எதிராக சதாமை வளர்த்து வாங்கியது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவி சறுக்கியது, சோவியத்துக்கு எதிராக சீனாவை வளர்த்துவிட்டு தவிப்பது என பல இடங்களில் உண்டு அப்படித்தான் 1980களில் சோவியத்துக்கு எதிராக பின்லேடனை […]

சுப்பிரமணியன் பாரதி

இந்திய திருநாட்டில் கர்ம வீரர்களாக வாழ்ந்தவர்கள் வெகுசிலரே, அவர்களின் இயல்பான நாட்டுபற்றும் இந்த பெருமைமிகு நாட்டுக்கும் அதன் தர்மத்துக்கும் வாழ்வதை விட கடமை பெரிதில்லை என வாழ்ந்து வரலாராய் நின்றவர்கள் சிலரே அவர்கள் தங்கள் செல்வம், வாழ்வு, திறமை என எல்லாவற்றையும் இந்த தேசத்துக்காய் கொடுத்து தன்னை எரித்து ஒளியேற்றி மறைந்தார்கள், அவர்களின் ஒப்பற்ற தியாகத்தினாலே இன்றும் வரலாறாய் நிற்கின்றார்கள் அடிவாங்கி சிலையாகும் கற்பகிரக சிலை போல, தன்னில் எரிந்து ஒளிவீசும் தீபம் போல, மழைதாங்கி வெயில்தாங்கி […]

ஞானசித்தன்

பாரதி என்பவன் வெறும் கவிஞன் அல்ல, வெறும் தேசாபிமானி அல்ல, சில கட்டுரைகளையும் புத்தகமும் பாடல்களும் எழுதி வயிறுவளர்க்க துணிந்தவனும் அல்ல‌அவன் ஒரு சித்தன், இந்து மரபில் வந்த ஞான சித்தன், அவனின் பாடல்கள் தேசாபிமானிகளுக்கும், கண்ணனின் பக்தர்களுக்கும் காளியின் பக்தர்களுக்கும் இன்னும் வீரசிவாஜியினை தேடுவோருக்கும் விவேகானந்தரை தேடுவோருக்கும் மட்டுமல்ல, அது வாழ்வில் நிம்மதியும் ஞானமும் தேடுவோருக்கும் பயன்படும்திருமூலரும், பட்டினத்தாரும், ஒளவையாரும் பாடிய பாடல்களின் தத்துவங்களை தன் ஒரே பாட்டில் சொல்லி சென்ற பெரும் சித்தன் அவன்வாழ்வின் […]

893ம் ஆண்டு இதே நாளில்

1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் முழங்கிய முழக்கம் அதுவரை பழமையான காட்டுமிராண்டி மதம், மூடபழகக்ம் கொண்ட மதம் என ஐரோப்பியர் நம்பிகொண்டு அந்த இழிவான நம்பிக்கையால் இந்துமதத்தை ஏளனபடுத்திகொண்டிருந்ததையும் தகர்த்து போட்டதுஅந்த ஞான உரைக்கு பின்பே உலகம் இந்துமதத்தை பெருமையாக கண்டது, ஏகபட்ட பேர் இந்துமதம் பணிந்தனர், எவ்வளவோ சமயவாதிகள் மவுனமாக இந்துமத பெருமையினை ஒப்புகொண்டனர்அந்த கூட்டத்தில் ஒரு விஞ்ஞானி இருந்தான், அவன் அன்றைய உலகில் மட்டுமல்ல என்றுமே விஞ்ஞான உலகில் மறக்கமுடியா […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 80

“கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசிநற்குண நற்செய்கை பூண்டாட்கு – மக்கட்பேறென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றேகொண்டாற்குச் செய்தவம் வேறு” அதாவது ஒரு குடும்பபெண் கற்பை ஆடாயாக உடுத்திக்கொள்ள வேண்டும், அன்பைப் பூவாக முடித்துக்கொள்ள வேண்டும். நாணம் என்னும் வெட்கத்தை உடம்பில் பூசிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் நல்ல குணம், நல்ல செயல் என்னும் அணிகலன்களை அணிந்துகொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட பெண்ணுக்கு குழந்தைப்பேறு என்பது செல்வமும் இருந்துவிட்டால் இல்லற வாழ்க்கை மிகவும் நல்லது, அப்படிபட்ட மனைவி அமைவது தவபயன் போன்றது மனைவியானவள் கற்பு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 02

“வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில்” இக்குறள் “வாக்கும் கருத்தும் மயக்கும் சமயங்கள் ஆக்கிய நூலினும் இல்” என பிரிந்து வரும்அதாவது நன்றாக பேசும் வாக்கு வன்மை உடையோர் கொண்ட மதத்தின், மானிடரை மயங்க வைக்கும் கருத்துக்களை கொண்ட மதத்தின் சமய நூல்களிலும் முக்தி அடையும் வழி இல்லை என்பது பொருள் இது இக்கால சூழலுக்கு மிகவும் சரியாக பொருந்துவதுதான் ஒளவை பெற்ற பெருஞானத்திற்கான சான்றுமிக நன்றாக பேசி பேசி மக்களை குழப்பும் அல்லது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications